உசுர குடுத்து தயாரிச்சிருக்காங்க! போட்டி நிறுவனங்களை தலை தெறிக்க ஓட விட போகும் டாடா கார்! நாளைக்கு லான்ச்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில், ஒரு காலத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). ஆனால் நிலைமை தற்போது முன்பு போல் இல்லை. எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி (MG) ஆகிய நிறுவனங்கள்தான், எலெக்ட்ரிக் கார் சந்தையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக கடுமையான போட்டியை வழங்க தொடங்கியுள்ளன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுதாரிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை முக்கியமான நிகழ்வு ஒன்று அரங்கேறவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) எலெக்ட்ரிக் காரின் அறிமுக நிகழ்ச்சி பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் விலை (Price) எவ்வளவு? என்பது நாளை அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டாடா ஹாரியர் இவி ஆஃப்-ரோடு திறன்களிலும் தலைசிறந்து விளங்கும் ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள எலிபென்ட் ராக் (Elephant Rock) மலையின் உச்சியை டாடா ஹாரியர் இவி எட்டியதை அந்த வீடியோவில் நாம் காணலாம்.

சாத்தியமே இல்லை என கருதப்பட்ட இந்த சாகசத்தை, டாடா ஹாரியர் இவி அனாயசமாக செய்து காட்டி, அனைவரையும் மிரள வைத்துள்ளது. இந்த வீடியோ வெளியான பிறகு, டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது. டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் ஒரு சில வசதிகள் (Features) ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன.
அவை லெவல் 2 அடாஸ், பெரிய பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை ஆகும். இவை தற்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ள வசதிகள்தான். என்னென்ன வசதிகள் உள்ளது? என்ற விரிவான பட்டியல் நாளை வெளியாகும்.
அத்துடன் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில், க்யூடபிள்யூடி தொழில்நுட்பமும் (QWD Tech) இடம்பெறவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பெறும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மற்றும் ஒரே எஸ்யூவி ஹாரியர் இவி ஆகும். அத்துடன் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில், மிகப்பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகப்பெரிய பேட்டரி தொகுப்பை ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்தான் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) தோராயமாக 600 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய முழுமையான தகவல்கள் நாளை வெளியாகி விடும். விலை நிர்ணயம் மட்டும் சரியாக இருந்தால், டாடா ஹாரியர் இவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








