டாடா நிறுவனத்தை குறைத்து மதிப்பு போட்டுட்டோம்! ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை இந்த 7 வசதிகளுக்காகவே வாங்கலாம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் டாடா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது களமிறக்கி இருக்கும் எலக்ட்ரிக் கார் தான் ஹாரியர் இவி ஆகும். இந்த புதிய காரில் பல அசத்தலான அம்சங்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றுள் கவனிக்கத்தக்க 7 அம்சங்களை பற்றி பார்ப்பதன் மூலம், ஹாரியர் இவி காரை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்கிற தெளிவு கிடைக்கும்.
குறைந்த விலை: பொதுவாகவே, பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் எலக்ட்ரிக் கார்கள் விலை அதிகமானவை ஆக இருக்கும். ஆனால், மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹாரியர் காரை காட்டிலும் விலை குறைவானதாக ஹாரியர் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஹாரியர் இவி காரின் ஆரம்ப நிலையிலான அட்வென்ச்சர் வேரியண்ட்டின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரியர் இவி அட்வென்ச்சர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.21.49 லட்சம் ஆகும். அதுவே, டீசல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஹாரியர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22.45 லட்சம் ஆகும்.

பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் திரை: நீண்ட வருடங்களுக்கு பிறகு ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார் மூலமாக காரில் வழங்கும் இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் டாடா நிறுவனம் அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. புதிய ஹாரியர் இவி காரில் 14.53-இன்ச்சில் அளவில் பெரியதான நியோ க்யூ.எல்.இ.டி (Neo QLED) திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் 'க்யூ' என்பது திரையின் காட்சியை மேம்படுத்தக்கூடிய குவாண்டம் லேயரை குறிக்கிறது.
செல்ஃப் பார்க்கிங் & சம்மன் மோட் (Self Parking & Summon Mode): ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை பார்க் செய்வது மிகவும் எளியதாக இருக்கும். ஏனெனில், இந்த காருடன் வழங்கப்படும் டிஜிட்டல் சாவியின் மூலமாக காருக்கு வெளியே குறிப்பிட்ட தூரத்தில் இருந்தே ஆப்ரேட் செய்து காரை பார்க் செய்வது மற்றும் அங்கிருந்து வெளியே கொண்டுவருவது போன்றவை செய்யலாம்.

புதிய டிஜிட்டல் சாவி: புதிய செல்ஃப் பார்க்கிங் வசதிகளை பெறுவதற்கு ஏற்ப ஹாரியர் இவி காருக்கான டிஜிட்டல் சாவியின் டிசைனில் புதிய மாற்றங்களை டாடா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. வட்ட வடிவில் இருக்கும் இந்த புதிய டிஜிட்டல் சாவி அளவிலும் சற்று சிறியதாக, கையில் வைத்திருப்பதே தெரியாத அளவிற்கு உள்ளது. டிஜிட்டல் சாவி என கூறப்பட்டாலும், இதில் சில பொத்தான்களும் உள்ளன.
DVR செயல்பாடுடன் எலக்ட்ரிக்-IRVM: ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரில் டாடா நிறுவனம் கொண்டுவந்துள்ள மற்றொரு அசத்தலான மற்றும் புதுமையான அம்சம், பின்னால் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு காருக்குள் வழங்கப்படும் கண்ணாடி ஆகும். ஏனெனில், இது பின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்களின் தரவுகள் மூலம் டிஜிட்டல் தரத்தில் காட்சியை காண்பிக்கக் கூடியதாக உள்ளது.
பின்பக்க சஸ்பென்ஷன்: டாடா நானோ காரின் விற்பனை நிறுத்தத்திற்கு பிறகு, நீண்ட வருடங்கள் கழித்து தன்னிச்சையாக செயல்படக்கூடிய பின்பக்க சஸ்பென்ஷன் 'அல்ட்ரா க்ளைட் சஸ்பென்ஷன்' (Ultra Glide Suspension) என்கிற பெயரில் ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக டேம்பர்கள் உடன் மல்டி-லிங்க் செட்-அப் பின்பக்க சஸ்பென்ஷன் சிஸ்டத்தில் இடம்பெற்றுள்ளது.
540-டிகிரி கேமரா: கார்களில் 360-டிகிரி கேமராவை கேள்விப்பட்டு இருக்கிறோம். இன்றைய கால மாடர்ன் கார்களில் 360-டிகிரி கேமராக்கள் பொனெட்டை காட்டதை வகையில் காட்சியை வழங்கக் கூடியவைகளாக வழங்கப்படுகின்றன. ஆனால், 540-டிகிரி கேமரா ஆனது இந்திய கார் மார்க்கெட்டிற்கே முற்றிலும் புதியது ஆகும். 540-டிகிரி என்பதன் அர்த்தம் என்னவென்றால், கேமரா மூலமாக காரின் அடிப்பகுதியையும் திரையில் பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல விஷயங்களில் மேம்பட்டதாகவும், அட்வான்ஸானதாகவும் புதிய டாடா ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள பல அம்சங்கள் இன்றைய கால மாடர்ன் கார்களில் கூட வழங்கப்படுவது இல்லை. எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனை புதிய ஹாரியர் இவி கார் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சரிசெய்ய முயற்சிப்பதை இந்த காரில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பார்க்கும்போது அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








