எலக்ட்ரிக் கார்கள் என்றாலே எடை குறைவானவைனு யாருங்க சொன்னா? டாடா உருவாக்கி இருக்கும் கார் அப்படியே நேர்மாறாக!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக ஹெரியர் இவி (Harrier EV) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car) விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த டாடா கார்களுள் ஒன்றான ஹெரியரின் எலக்ட்ரிக் வெர்சன் தான், ஹெரியர் இவி ஆகும். தற்போதைக்கு ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காரின் முன்பதிவுகள் வருகிற ஜூலை 2ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஜூன் 3ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போது டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் குறிப்பிட்ட சில விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. இன்னும் சொல்லப்போனால், காரின் ஆரம்ப விலை மட்டுமே ரூ.21.49 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெரியர் இவி காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் இதன் பின்னரே வெளியிடப்பட உள்ளன.

tata harrier ev car details

ரூ.21.49 லட்சம் என்கிற அறிமுக விலையின்படி பார்க்கும்போது, டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புதிய எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார் போட்டியாக இருக்கும். இத்தகைய புதிய டாடா எலக்ட்ரிக் காரை பற்றிய மேலும் கூடுதல் விபரங்களாக தற்போது காரின் எடை மற்றும் டாப்-ஸ்பீடு (Top-speed) குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன.

ஜூன் 3ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட போதே ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் 65kWh மற்றும் 75kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பேட்டரிகளுடன் பின்-சக்கர-டிரைவ் மற்றும் குவாட்-வீல்-டிரைவ் என இரு விதமான ஆப்ஷன்களில் ஹெரியர் இவி விற்பனை செய்யப்பட உள்ளது.

tata harrier ev car details

எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து இயக்க ஆற்றல் காரின் எந்த சக்கரங்களுக்கு செல்கிறது என்பதை பொறுத்து பின்-சக்கர-டிரைவ் மற்றும் குவாட்-வீல்-டிரைவ் ஆப்ஷன்கள் அமைகின்றன. அதாவது, பின்-சக்கர-டிரைவ் வேரியண்ட்களில் காரின் பின் சக்கரங்ளுக்கு மத்தியில் மட்டுமே ஒரேயொரு எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும். அதுவே, குவாட்-வீல்-டிரைவ் வேரியண்ட்களில் முன் சக்கரங்களுக்கு இடையேயும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் என இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும்.

இதில், ஹெரியர் இவி காரின் பின்-சக்கர-டிரைவ் வேரியண்ட்களின் எடை 2,235 கிலோ மற்றும் குவாட்-வீல்-டிரைவ் வேரியண்ட்களின் எடை 2,336 கிலோ ஆகும். இது, வழக்கமான டீசல் என்ஜினை கொண்ட ஹெரியர் காரை காட்டிலும் அதிகம் ஆகும். பொதுவாக, பெட்ரோல்/ டீசல் கார்களை காட்டிலும் எலக்ட்ரிக் கார்களின் எடை தான் குறைவாக இருப்பது வழக்கம்.

tata harrier ev car details

ஆனால், சமீப காலமாக அதிக பேட்டரிகள் உடன் எலக்ட்ரிக் கார்கள் எடைமிக்கவை ஆக உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் பின்-சக்கர-டிரைவ் வேரியண்ட்கள் டீசல் ஹெரியர் காரை காட்டிலும் 300 கிலோ எடைமிக்கவை ஆகவும், குவாட்-வீல்-டிரைவ் வேரியண்ட்கள் 400 கிலோ வரையில் எடைமிக்கவை ஆகவும் உருவாக்கப்படுகின்றன.

ஹெரியர் இவி காரின் பின்-சக்கர-டிரைவ் வேரியண்ட்கள் மற்றும் குவாட்-வீல்-டிரைவ் வேரியண்ட்களில் எவ்வளவு இயக்க ஆற்றலை பெறலாம் என்பது குறித்த விபரங்களை இன்னமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 180கிமீ வேகத்தில் செல்லலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், ஹெரியர் இவி காரை பற்றி வெளிவரும் விபரங்களை எல்லாம் வைத்து பார்த்தால், எக்ஸ்இவி 9இ காரை ஹெரியர் இவி விற்பனையில் முந்துவதற்கு வாய்ப்புகள் குறைவே என தோன்றுகிறது. உதாரணத்திற்கு, ஹெரியர் இவி காரின் டாப்-ஸ்பீடு 180km/h என இருக்கும் நிலையில், எக்ஸ்இவி 9இ காரின் டாப்-ஸ்பீடு 200km/h-க்கும் அதிகம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 11, 2025, 22:59 [IST]
English summary
Tata harrier ev electric car top speed and weight details revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X