பேய்க்கும் பேய்க்கும் சண்ட! மஹிந்திராவின் ஆட்டத்தை அடக்க வரும் புது டாடா கார்! மார்க்கெட்டை புரட்டி போட போகுது

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் அத்தி பூத்தது போல இந்திய சந்தையில் எப்போதாவதுதான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரும். ஆனால் சமீப காலமாக ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன.

இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வர தயாராகவும் உள்ளன. இதில், டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மிகவும் முக்கியமானது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். டாடா ஹாரியர் ஐசி இன்ஜின் வெர்ஷன் ஏற்கனவே விற்பனையில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

Tata Harrier EV Side Design

அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான், டாடா ஹாரியர் இவி. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரை வரும் ஜூன் 3ம் தேதி (June 3) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு முக்கியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன்படி டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Harrier EV

இவை எல்லாம் தவிர ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், டெர்ரெயின் மோடுகள், ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில், 75 kWh பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 500 கிலோ மீட்டர்களுக்கு மேல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Gen 2 Acti.EV பிளாட்பார்ம் அடிப்படையில் டாடா ஹாரியர் இவி கட்டமைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 6 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடக்கூடிய திறனை டாடா ஹாரியர் இவி பெற்றிருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 22 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 30 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) மற்றும் மஹிந்திரா பிஇ6 (Mahindra BE 6) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா ஹாரியர் இவி போட்டியிடும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், டாடா ஹாரியர் இவி-யின் வருகை, அவற்றுக்கு சவாலாக அமையலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 22:45 [IST]
English summary
Tata harrier ev expected price driving range features all details here
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+