செங்குத்தான மலையில் அசால்டாக ஏறிய இவி! இந்த வீடியோ பார்த்து மிரண்டு போயிட்டாங்க!
டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க தயாராகி வருகிறது. இந்த கார் 500 என்எம் டார்க் திறனை உருவாக்கும் செட்டப் உடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார் சமீபத்தில் ஆஃப்ரோடில் மலையில் மிக சுலபமாக ஏறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் சூழ்நிலையில் இந்த காரில் என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம்? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன அணிவகுப்பை விரிவுபடுத்தும் எண்ணத்தில் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் பல முறை சோதனை செய்யப்பட்ட நிலையில் நாளை அதாவது 3ம் தேதி மதியம் 2 மணிக்கு இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த கார் குறித்த டீசர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மலை பகுதிகளில் இந்த கார் பயணிக்கும் வகையிலான வீடியோவை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் பாறைகள், பனி, மணல் உள்ளிட்ட பல வகையான ஆஃப்ரோடு அம்சங்களில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் 5 பேர் வரை பயணிக்க முடியும். டுயல் மோட்டார் செட்டப் உடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதில் ஒவ்வொரு ஆக்ஸிலுக்கும் ஒரு மோட்டார் பொருத்தப்படுகிறது.
இது போக இந்த டீசரில்இந்த காரில் உள்ள ஆஃப்ரோடு க்ரூஸ் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இருப்பது காட்டப்பட்டது. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனில் உள்ள பல அம்சங்கள் இதில் உள்ளது. இந்த காரில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ன்சோல் மற்றும் கிராஃபிகல் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த டீசர் வீடியோவில் கேரளாவில் சுமார் 300 அடிக்கும் அதிகமான உயரத்தில் உள்ள மலையில் இந்த கார் அசால்டாக ஏறியது. இந்த பாதை கரடு முரடான பாதையாகவும், மிக செங்குத்தான ஏற்றம் நிறைந்த பாதையாகவும் இருக்கிறது. இதில் இந்த கார் அசால்டாக ஏறியது. இந்த கார் மொத்தம் 3 கட்டங்களாக இந்த மலையேற்றத்தை நிகழ்த்தியது.
இதில் 3வது கட்டமாக 34 டிகிரிக்கும் அதிக செங்குத்தாக இருக்கும் மலை மீது இந்த கார் ஏற வேண்டும். இதையும் அசால்டாக இந்த கார் செய்து காட்டியது. இந்த வீடியோவை பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒரு எலெக்ட்ரிக் கார் இவ்வளவு ஆஃப் ரோடு திறன்களுடன் இருக்குமா என நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங், அம்சம் உள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 600 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக இந்த காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 75 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் டாப் வேரியன்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. . இந்த பேட்டரி ஆப்ஷன் கர்வ் இவி காரிலிருந்து பெற்ற பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ஆஃப்ரோடு அம்சங்களுடனான கார் ஒன்றை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். இந்த கார் விற்பனைக்கு வரும் போது விற்பனை எண்ணிக்கை மிக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









