ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா! போட்டி நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்த டாடா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV), சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரில் (Electric Car) மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 65 kWh மற்றும் 75 kWh ஆகிய பேட்டரிகள் ஆகும். இதில், 65 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடலானது, ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் மட்டும் கிடைக்கும். ஆனால் 75 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடலானது, ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என மொத்தம் 2 ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இதில், 65 kWh/ரியர் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 538 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் 75 kWh/ரியர் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் 627 கிலோ மீட்டர்கள் ஆகவும், 75 kWh/ஆல் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் 622 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது.
டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில், 14.5 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 540 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா, பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், டால்பி அட்மாஸ் உடன் பிரீமியம் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் வென்டிலேஷன் வசதி உடன் கூடிய இருக்கைகள், டிஜிட்டல் ஐஆர்விஎம் மற்றும் டிஜிட்டல் கீ போன்ற வசதிகளையும் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. அத்துடன் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் ஆஃப்-ரோடு சாகச திறன்களிலும் தலைசிறந்து விளங்கும்.
ஆஃப்-ரோடு சாகச திறன்களை, ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டு வருகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 21.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 30.23 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் கருதப்படுகிறது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கு மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.
புக்கிங் (Bookings) தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்திலேயே டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து விட்டனர். இந்த சூழலில், டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
ஹரியானா (Haryana) மாநிலம் குர்கானில் (Gurgaon) செயல்பட்டு வரும் ஆட்டோ விகாஸ் என்ற டாடா டீலர்ஷிப், ஒரே நாளில், 25 ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இந்த தகவலை the_salahcar தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கு குவிந்துள்ள முன்பதிவுகளில் இருந்தே, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதற்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்த ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் உதவி செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) போன்ற கார்களுடன், டாடா ஹாரியர் இவி போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








