இந்தியாவே எதிர்பார்த்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! போட்டி நிறுவனங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆயிருச்சு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி, டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த ஜூலை 2ம் தேதி, டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த வரிசையில் புனேவில் (Pune) உள்ள டாடா தொழிற்சாலையில், ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகள், நடப்பு ஜூலை மாதத்திலேயே தொடங்கப்படவுள்ளன. இது டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 65kWh மற்றும் 75kWh ஆகியவை ஆகும். இதில், 65kWh பேட்டரி உடன் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 75kWh பேட்டரி உடன் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என 2 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், 65kWh/ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 538 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 75kWh/ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்களின் டிரைவிங் ரேஞ்ச் 627 கிலோ மீட்டர்கள் ஆகவும், 75kWh/ஆல் வீல் டிரைவ் வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 622 கிலோ மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரில் லெவல் 2 அடாஸ், 7 ஏர்பேக்குகள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் என ஏராளமான வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 21.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 30.23 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. வரும் மாதங்களில், இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் இடையே போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








