விலை இவ்வளவு கம்மிதானா? ஹாரியர் இவி க்யூடபிள்யூடி விலை விபரங்கள் வெளியானது!
டாடா இவி நிறுவனம் தனது ஹாரியர் இவி க்யூடபிள்யூடி வேரியன்ட் காரின் விலைகளை தற்போது அறிவித்துள்ளது. ஏற்கனவே ரியர் வீல் டிரைவ் காரின் வேரியன்ட் விலைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனது ஆல் வீல் டிரைவ் வேரியன்டான க்யூடபிள்யூடி வேரியன்ட் காரின் விலைகளை தற்போது அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வேரியன்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் மக்கள் பலர் எலெக்ட்ரிக் கார் மீது மோகம் கொண்டுள்ளதால் அந்த மார்கெட்டை பிடிக்க உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த காரின் அறிமுகம் இந்த மாத துவக்கத்தில் இருந்தாலும் அதில் ஆரம்ப விலை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. வேரியன்ட் வாரியிலான விலைகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியன்ட் விலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஆல் வீல் டிரைவ் வேரியன்டான க்யூடபிள்யூடி வேரியன்டின் விலை அறிமுகமாகியுள்ளது. இதன் படி ரூ28.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. எம்பவர்டு 75 வேரியன்டில் மட்டுமே க்யூடபிள்யூடி வேரியன்ட் கிடைக்கிறது.
இந்த கார் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. அதன்படி நைனிட்டல் நாக்டர்னல், எம்பவர்டு ஆக்ஸைடு, ப்யூர் கிரீன்,பிரிஸ்டைன் ஒயிட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வமான புக்கிங் வரும் ஜூலை 2ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. துவங்கும் நாளிலேயே ஏகப்பட்ட புக்கிங் வந்து குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. குறிப்பாக 65 kWh மற்றம் 75 65 kWh ஆகிய இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது. மேலும் சிங்கிள் மற்றும் டுயல் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 75 kWh பேட்ரி ஆப்ஷனில் மட்டும் ஆல் வீல் டிரைவ் மற்றும் டுயல் மோட்டார் ஆப்னுன்கள் உள்ளன.
ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனவில் 238 எச்பி பவர் மற்றும் 315 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் அம்சங்கள் உள்ளன. இதுவே ஆல் வீல் டிரைவ் செட்டப்பில் 313 எச்பி பவர் மற்றும் 507 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 65 kWh பேட்டரி பேக் கொண்ட கார் 538 கி.மீ ரேஞ்சையும், 75 kWh ரியர் வீல் டிரைவில் 627 கி.மீ ரேஞ்சையும், ஆல் வீல் டிரைவில் 622 கி.மீ ரேஞ்சையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், ஏர் ஃப்யூரிஃபையர், பவர்டு டெயில் கேட், க்ரூஸ் கண்ட்ரோல், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டைடாகும் ஆர்ம் ரெஸ்ட், கூல்டு ஸ்டோரேஜ், ஆட்டோமெட்டிக் பார்க்கிங் அசிஸ்டென்ஸ், சம்மன் மோடு,ரிவர்ஸ் அசிஸ்டென்ஸ், பெடல் ஸ்விஃப்டர்கள், 540 டிகிரி கேமரா, காருக்கு அடியில் இருக்கும் பொருட்களை பார்க்கும் வியூ உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகமாகியுள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க துவங்கிய நிலையில் ஆல் வீல் டிரைவ் செட்டப் உடன் இந்த கார் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காரின் விற்பனை விரைவில் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









