ரேட் எல்லாம் சொல்லிட்டாங்க! இன்னும் என்ன வெயிட்டிங்? உடனே இந்த காரை புக் பண்ணிட வேண்டியது தானே?

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் ரியர் வீல் டிரைவ் காரின் முழு விலை பட்டியல் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் வரும் ஜூலை 2ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த காரின் விலை விபரங்கள் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்குகிறது அதன்படி அட்வெஞ்சர் 65, அட்வெஞ்சர் எ் 65, ஃபியர்லெஸ்+ 65, ஃபியர்லெஸ் +75 மற்றும் எம்பவர்டு 75 ஆகிய வேரியன்ட்களில் விற்பனவையாகி வருகிறது.

Tata Harrier EV RWD Price

ஹாரியர் இவி காரை பொருத்தவரை ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ21.49 லட்சம் முதல் ரூ27.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் புக்கிங் ஜூலை 3ம் தேதி முதல் விற்பனையாகி வருகிறது. கடந்த 2ம் தேதி தான் இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் அட்வெஞ்சர் 65 வேரியன்ட் ரூ21.49 லட்சம் என்ற விலையிலும், அட்வஞ்சர் எஸ் 65 ரூ21.99 லட்சம் என்ற விலையிலும், ஃபியர்லெஸ் + 65 வேரியன்ட் ரூ23.99 லட்சம் என்ற விலையிலும், ஃபியர்லெஸ் +75 வேரியன்ட் ரூ24.99 லட்சம் என்ற விலையிலும், எம்பவர்டு 75 வேரியன்ட் ரூ27.49 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது எல்லாம் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் வேரியன்டிற்கான விலை தான்.

Tata Harrier EV RWD Price

இதுவே ஆல் வீல் டிரைவ் வேரியன்டிற்கான விலைகள் 27ம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் பேட்டரி மற்றும் ரேஞ்ச் விபரங்களை பற்றி பார்த்தால் இந்த காரில் 75 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 621 கி.மீ ரேஞ்ச் தரும் என சான்றழிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரியல் வேல்டில் 480-505 கி.மீ வரை ரேஞ்ச் தரும்என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் ஃபெர்பார்மென்ஸை பொருத்தவரை டுயல் மோட்டார் செட்டப்பில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் 396 பிஎச்பி பவரையும் 504 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.3 நொடியில் பிக்கப் செய்துவிடுகிறது.

Tata Harrier EV RWD Price

இந்த காரில் 14.53 இன்ச் நியோ க்யூஎல்இடி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இது 10 ஜேபிஎல் ஆடியோ சிஸ்டத்துடன் டால்பி அட்மாஸ் செட்டப் உடன் இருக்கிறது. இ-வாலெட் ஆட்டோ பார்க் அசிஸ்ட், டிஜிட்டல் கீ, டிரைவ்பே இன்டகரேஷன், 540 டிகிரி கேமரா, மற்றும் 6 டெரைன் மோடுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காருக்கு லைஃப்டைம் பேட்டரி வாரண்டியை வழங்குகிறது. இது முதலில் இந்த காரை வாங்கும் வாடிக்கைாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த கார் செகண்ட் ஹேண்ட் காரில் விற்பனையாகிவிட்டால் இந்த வாரண்டி காலாவதியாகிவிடும். அதன் பிறகு காரின் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டால் வாரண்டி செல்லுபடியாகாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ள நிலையில் ஹாரியர் இவி கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்இதன் விலை விபரங்கள் வெளியாகியுள்ளது. நிச்சயம் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2025, 23:00 [IST]
English summary
Tata harrier ev rwd price starts at rs 21 49 lakh goes up to 27 49
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X