டாடா ஷோரூம்களில் கம்பீரமா நிற்கும் எலக்ட்ரிக் கார்கள்! இனி சாலைகளிலும் பார்க்கலாம்...

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா ஹாரியர் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக ஹாரியர் இவி அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை புக் (Book) செய்தவர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகளும் சில வாரங்களில் துவங்கப்பட்டன. கேரளாவில் டாடா ஷோரூம் (Showroom) ஒன்றில் ஒரே நாளில் 25 ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டதை கூட நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

tata harrier ev stealth edition deliveries starts

இந்த நிலையில், ஹாரியர் இவி காரின் ஸ்டீல்த் எடிசனின் (Stealth Edition) டெலிவிரிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கார்களில் அவ்வப்போது புது புது ஸ்பெஷல் எடிசன் (Special Edition) கார்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதை கடந்த காலங்களில் இருந்தே பார்த்து வருகிறோம்.

குறிப்பாக, கார்களை முழுவதும் கருப்பு நிறத்தில் வழங்கும் விதமாக பிளாக் எடிசன்கள் மற்றும் டார்க் எடிசன்கள் டாடா மோட்டார்ஸில் இருந்து அடிக்கடி அறிமுகம் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில், தனது கார்களில் அவ்வப்போது புதியதாக ஸ்டீல்த் எடிசன்களையும் அறிமுகம் செய்வதை டாடா நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரிலும் புதியதாக ஸ்டீல்த் எடிசன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

tata harrier ev stealth edition deliveries starts

அதன் டெலிவிரிகள் தான் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ 'ஷிவ்சக்திகார்ஸ்9298' என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், டெலிவிரி பெறப்பட்ட ஹாரியர் இவி ஸ்டீல்த் எடிசன் காரை ஷோரூமில் இருந்து பெண் ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார் உடன் சேர்த்து, அதன் ஸ்டீல்த் எடிசனையும் டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தது. இதனாலேயே, ஹாரியர் இவி கார் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே ஹாரியர் இவி ஸ்டீல்த் எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டது.

tata harrier ev stealth edition deliveries starts

டாடா ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரும் விலைகள் ரூ.21.49 லட்சத்தில் இருந்து துவங்கும் நிலையில், ஹாரியர் இவி ஸ்டீல்த் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.28.24 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான குவாட் வீல் டிரைவ் (Quad Wheel Drive) சிஸ்டத்துடன் கிடைக்கும் 75 ACFC வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை அதிகப்பட்சமாக ரூ.30.23 லட்சமாக உள்ளது.

வழக்கமான ஹாரியர் இவி எலக்ட்ரிக் காருக்கும், ஸ்டீல்த் எடிசனுக்கும் இடையேயான முக்கியமான வேறுப்பாடு, காரின் நிறம் ஆகும். ஏனெனில், ஹாரியர் இவி ஸ்டீல்த் எடிசன் கார் முழுவதும் மேட் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. அதாவது, பளிச்சிடும் க்ரோம் பாகங்கள் அனைத்தும் இந்த காரில் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த காரில் பொருத்தப்படும் 19-இன்ச் பிளேட்-ஸ்டைல் சக்கரங்கள் ட்யூயல்-டோன் ஃபினிஷிங்கை கொண்டவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டாடா கார்கள் எவ்வளவு வேகமாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுகிறதோ, அதே வேகத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு விடுகிறது. ஆக, இனி அனைத்து விதமான ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார்களையும் சாலையில் காணலாம். மேட் ஃபினிஷிங்கில் முற்றிலும் கருப்பு நிறத்தில் எலக்ட்ரிக் காரை சாலையில் காண்பதற்கே பிரம்மிப்பாக இருக்க போகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 4, 2025, 23:00 [IST]
English summary
Tata harrier ev stealth edition deliveries starts in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X