டீசல் காருக்கும் இவி காருக்கும் என்ன வித்தியாசம்? இப்படி யாரும் ஒப்பிட்டு பார்த்திருக்க மாட்டாங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கார் அந்நிறுவனத்தின் அதிக பவர்ஃபுல்லான, அதே நேரம் அட்வான்ஸாடான அம்சங்கள் நிறைந்த காராக இ்நத காரை உருவாக்கியுள்ளது. இந்த கார் அதன் டீசல் வேரியன்ட் காரின் லுக்கிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாரியரின் டீசல் காருக்கும் இந்த எலெக்ட்ரிக் காருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம்.
டாடா ஹாரியர் டீசல் மற்றும் டீசல் இவி காருக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் மினிமலான வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இவி காரின் முகப்பு பகுதி முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர், சில்வர் பாஷ் பிளேட், இவி பேட்ஜிங், ஏரோ ஃபிரெண்ட்லி அலாய் வீல்கள், இதில் வழங்கப்பட்டுள்ளன.

டீசல் காரிலிருந்து எடுக்கப்பட்ட வடிவமைப்பாக பிளேடு வடிவ கனெக்டெட் எல்இடி டிஆர்எல், வெர்டிகலாக வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட்டுகள், ஷார்ப்பான பின்பக்க லைட் பார், ரூஃப் ஸ்பாயிலர்களில் ஸ்டாப் லைட் ஆகிய அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.
கலர் ஆப்ஷன்களில் இந்த இரண்டு கார்களுக்கு இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. டாடா ஹாரியர் டீசல் இன்ஜின் கார் மொத்தம் 8 விதமானகலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆஷ் கிரே, கோரல் ரெட், லுனார் ஒயிட், மேட் ஸ்டெல்லத் பிளாக், ஒப்ரியன் பிளாக், பெப்பில் கிரே, ஸீவீட் கிரீன் மற்றும் சன்லிட் மஞ்சள் ஆகிய நிறங்களில் விற்பனையாகி வருகிறது.

ஹாரியர் இவி காரை பொருத்தவரை 5 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி எம்பவர்டு ஆக்ஸைடு, நானிட்டல் நாக்டூரின், மேட் ஸ்டெல்லத் பிளாக், பிரிஸ்டைன் ஒயிட், ப்யூர் கிரே ஆகிய நிறங்களில் இந்த கார்கள் தற்போது விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் அளவுகளில் டாடா இவி கார் 2 மிமீ நீளம், 22 மிமீ உயரம் டீசல் காரை விட அதிகமாக இரகு்கிறது. இரண்டு காரும் ஒரே மாதிரியாக 2741 மிமீ வீல் பேஸை கொண்டுள்ளது.
கேபின் விஷயத்தில் இரண்டு காரிலும் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவுமில்லை. ஜெனரல் டேஷ்போர்டு லேஅவுட் இரண்டு காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் இலுமினேட் செய்யப்பட்ட டாடா லோகோ கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டள்ளது. மேலும் இதில் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஹாரியர் இவி காரில் 14.53 இன்ச் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது சாம்சங் நியோ க்யூ எல்இடி வழங்கப்பட்டுள்ளது.

ஹாரியர் இவி கார் ஆக்டி.இவி என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே ஹாரியர் டீசல் கார் ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 2 எல்எஃப் பி பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது 65 கிலோ வாட் ஹவர் மற்றும் 75 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் மோட்டார் வேரியன்டில் 238 எச் பி பவர் பின்பக் மோட்டாரில் கிடைக்கிறது. முன்பக்க மோட்டாரில் 158 எச்பி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரில் 75 கிலோ வாட் ஹவர் பேட்டரி 4 வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் விற்பனையாகி வருகிறது. இதுவே டீசல் காரில் முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. ஹாரியர் இவி காரில் ஆஃப்ரோடு அம்சங்கள் இருக்கிறது. டீசல் இன்ஜின் வேரியன்டில் ஆப்ஃரோடு அம்சங்கள் கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கம்பஷன் இன்ஜின் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு வகையான வாகனங்களை வழங்கி வரும் நிலையில் ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இதனால் இந்த கார் மக்கள் மனதை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









