இந்த ரெண்டு கார்ல எது பெஸ்ட்? ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது கிடையாது போலயே!

டாடா ஹாரியர் இவி கார் தற்போது இந்தியாவில் அறிமுமாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் நேரடியாக மஹிந்திரா எக்ஸ்இவி 9இ என்ற காருக்கு போட்டியாக களம் இறக்கி வருகிறது. இந்த காரை நாம் இங்கே ஓப்பிட்டு பார்க்கப்போகிறோம். இதன் விலை, ரேஞ்ச், பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு கார்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம்.

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காருக்கான புக்கிங்கை வரும் ஜூலை மாதம் 2ம் தேதி துவங்குகிறது. இது அந்நிறுவனத்தின் 5வது இவி கார் ஆகும். ஏற்கனவே டியாகோ, டிகோர், நெக்ஸான், மற்றும் கர்வ் ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. டாடா ஹாரியர் இவி கார் ஆல்வீ்ல டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த காரும் மார்கெட்டில் போட்டியில் உள்ள மஹிந்திரா எக்ஸ் இவி 9இ காரும் எப்படி ஒப்பிடப்படுகிறது என பார்ப்போம்.

Tata Harrier EV vs Mahindra XEV 9e

விலை: விலையை பொரத்தவரை டாடா நிறுவனத்தன் ஹாரியர் இவி கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே மஹிந்திரா எக்ஸ்இவி 9இ கார் ரூ22.65 லட்சம் என்ற விலயில் விற்பனையாகி வருகிறது. இது ஆரம்ப விலை தான் டாடா நிறுவனம் ஹாரியர் இவி காரின் வேரியன்ட் விலை விபரங்களை இதுவரை வெளியிட வில்லை. மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் டாப் மாடல் விலை ரூ31.25 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்கிறது.

Model Introductory Price (ex-showroom)
டாடா ஹாரியர் இவி Tata Harrier EV Rs 21.49 Lakh
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ Mahindra XEV 9e Rs 22.65 Lakh

அளவுகள்: டாடா ஹாரியர் இவி கார் 4607 மிமீ நீளம்,2132 மிமீ அகலம், 1740 மிமீ உயரம் ஆகிய அளவுகளிலும், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ கார்4789 மிமீ நீளம், 1907 மிமீ அலகம், 1694 மிமீ உயுரம் ஆகிய அளவுகளிலும், வடிவமைக்கப்பட்டுள்ளது. அளவுகளில் பெரிய அளவில் இரண்டு காரிலும் மாற்றங்கள் இல்லை.

Tata Harrier EV vs Mahindra XEV 9e

வீல் பேஸ் அளவுகளை பொருத்தவரை டாடா ஹாரியர் இவி காரில் 2741 மிமீ அளவிலும் மஹிந்திரா எக்ஸ் இவி 9இ காரில் 2775 மிமி அளவிலும் வழங்கப்பட்டுள்ளது பூட் அளவில் ஹாரியர் இவி காரில் 502 லிட்டரும், எக்ஸ்இவி 9இ காரில் 663 லிட்டர் அளவிலும், முன்பக்க ஃபிரங்க் பகுதி ஹாரியர் இவியில் 35 லிட்டர் அளவிலும், மஹந்திரா எக்ஸ்இவி 9இ காரில் 150 மிமீ அளவிலும் வழங்கப்பட்டுள்ளது. அகலம் உயரத்தை தவிர மஹிந்திரா கார் தான் அனைத்தும் அதிகமாக உள்ளது.

Dimensions Tata Harrier EV Mahindra XEV 9e
Length (mm) 4607 4789
Width (mm) 2132 1907
Height (mm) 1740 1694
Wheelbase (mm) 2741 2775
Frunk (L) 35 150
Boot Capacity (L) 502 663

பேட்டரி : டாடா ஹாரியர் இவி காரில் 65 மற்றும் 75 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இது 2 மோட்டார் செட்டப் உடன் வருகிறது. முன்பக்க ஆக்கிலில் உள்ள மோட்டார் 156 பிஎச்பி பவரிலும், பின்பக்க ஆக்ஸிலில் உள்ள மோட்டார் 235 பிஎச்பி பரிலும் இயங்கும் திறன் கொண்டது. இந்த காரில் 504 என்எம் டார்க் திறன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆல் வீல் டிரைவ்சிஸ்டம் வழங்கப்டட்டுள்ளது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.3 நொடியில் பிக்கப் செய்துவிடும்.

Tata Harrier EV vs Mahindra XEV 9e

ரேஞ்ச்: டாடா ஹாரியர் இவி காரில் அதிகபட்சமாக 627 கி.மீ ரேஞ்ச் முழு சார்ஜி்ல கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஆானல் டாடா நிறுவனம் இந்த காரில் சி75 முறையின்படி சோதனை செய்து பார்த்தபோது 480-505 கி.மீ வரை ரேஞ்ச் ரியல் வேர்ல்டில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ் இவி 9இ காரில் 542 கி.மீ ரேஞஅச் 59 கிலோ வாட் ஹவர் பேட்டரியிலும், 656 கி.மீ 79 கிலோ வாட் ஹவர் பேட்டரியிலும் வழங்கப்பட்டுள்ளது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு கார்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒவ்வொரு வகையில் இரண்டு கார்களும் தனித்து நிற்கின்றன. இந்த காரில் ஒரு காரை நீங்கள் வாங்க விரும்பினால் இந்த இரண்டு காரிலும் உள்ள அம்சங்களை பார்த்து எந்த கார் உங்களுக்கான தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை வைத்து முடிவு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 23:40 [IST]
English summary
Tata harrier ev vs mahindra xev 9e price range battery comparison
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X