இந்த காரை இப்ப புக் பண்ணா 7 மாசம் கழிச்சு தான் கிடைக்கும் ! இதை வாங்க லைன்ல நிக்குறாங்க!
டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங் கடந்த 2ம் தேதி முதல் துவங்கியது. வெறும் ரூ21,000 முன்பணத்துடன் இந்த காரை டாடா நிறுவனத்தின் வெப்சைட்டிலோ அல்லது டாடா நிறுவன டீலர் ஷிப்களிடமோ புக்கிங் செய்ய முடியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
இந்த கார் எம்பவர்டு, அட்வெஞ்சர், ஃபியர்லெஸ் ஆகிய 3 விதமான வேரியன்டகளில் விற்பனையாகி வருகிறது. இதில் எம்பவர்டு வேரியன்டில் மட்டும் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் எம்பவர்டு வேரியன்டில் 75 மற்றும் ஸ்டாண்டர்டு ஆகிய பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் அதில் ஆல்வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களும் உள்ளன. இந்த எம்பவர்டு வேரியன்டில் ஏடி ஃபாஸ்ட் சார்ஜருடன் வாங்கினால் 12-15 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே காரை ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் இல்லாமல் எம்பவர்டு 75, எஸ்டி75, ஆல் வீல் டிரைவ் 75, ஆல்வீல் டிரைவ் எஸ்டி 75 ஆகிய கார்களை வாங்கினாலும் அதற்கும் 12-15 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வேரியன்டான அட்வெஞ்சர் வேரியன்டை பொருத்தவரை 65, எஸ் 65 ஆகிய 2 ஆப்ஷன்களும் அதற்கான ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் உடன் கூடிய ஆப்ஷனும் விற்பனைக்கு வருகிறது. இதில் அட்வெஞ்சர் 65 மற்றும் 65 ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் கார்களுக்கு 28-30 வாரங்கள் வரை காத்திருப்பு காலமும், எஸ்65, எஸ் 65 ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் காருக்கு 18-21 வாரங்கள் வரை காத்திருப்பு காலமும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தாக ஃபியர்லெஸ் + வேரியன்டை பொருத்தவரை 65 மற்றும் 75 ஆகிய பேட்டரி ஆப்ஷன்களுடன் ஏசி ஃபாஸ்ட் சார்ஜரும் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் எப்படியான ஆப்ஷனை தேர்வு செய்தாலும் அந்த காருக்கு 18-21 வாரங்கள் வரை காத்திருப்பு காலத்தை வழங்குகிறது.
இந்த காரை மக்கள் அதிகம் விரும்பி தேர்வு செய்ய துவங்கவிட்டனர் இந்த காரில் 360 டிகிரி வியூ, டிரான்ஸ்பரன்ட் மோடு, பிளைன்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், எச்டி ரியர் வியூ மானிட்டர், 7 ஏர்பேக்குகள், அடாஸ் லெவல் 2, ஐ-விபிஏசியுடன் கூடிய இஎஸ்பி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமெட்டிக் ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இது போக இந்த காரின் உள்ளே சொகுசான சீட்டுகள், பவர்டு மற்றும் வென்டிலேட் செய்யக்கூடிய முன்பக்க சீட்டுகள், வாய்ஸ் அசிஸ்டெட் பானரோமிக் சன்ரூஃப், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ஸ் லைட்டிங் மியூசிக் மற்றும் டிரைவ்மோடு உடன் ஸிங்க் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் வெஹிகிள் டு லோடு மற்றும் வெஹிகிள் டு வெஹிகிள் பவர் ஷெரிங் ஆப்ஷனும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கறது. அதன் இவி வெர்ஷன் அறிமுகமானதும் பலர் இதை வாங்க புக் செய்துள்ளதால் அதிக காத்திருப்பு காலம் இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு மட்டும் 7 மாதம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









