புதிய பெட்ரோல் என்ஜினால் குறையும் டாடா கார்களின் விலைகள்! அறிமுக தேதியை சொல்லுங்கப்பா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது முன்னணி எஸ்யூவி கார் மாடல்களான ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) கார்களை முதன்முறையாக பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் உடன் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக, ஹாரியர் பெட்ரோல் கார் தற்போது டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது விற்பனைக்கு தயாரான காரின் மிகத் தெளிவான காட்சியை வழங்குகிறது. இந்த எஸ்யூவி டாடாவின் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் ஹைபீரியன் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது. இது ஹாரியரின் சந்தை ஆதிக்கத்தை விரிவாக்கும் ஒரு முக்கிய படியாகும். தற்போது டீலர்ஷிப் ஷோரூமுக்கு வந்துள்ள ஹாரியர் பெட்ரோல் காரின் என்ஜின் கவரில் "HYPERION" என்ற பிராண்டிங் தெளிவாகத் தெரிகிறது.

tata harrier petrol car spotted

இது 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும். இது முதன்முதலில் 2023 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎஸ் ஆற்றலையும், 280 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரும் இந்த பெட்ரோல் என்ஜின் விரைவில் டாடா கார்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்த புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் காணப்பட்ட இந்த ஹாரியர் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சியரா (Sierra) காரிலும் இந்த புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

tata harrier petrol car spotted

ஆனால், அந்த காரில் இந்த என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் வழங்கப்படாததால், ஹாரியர் மற்றும் சஃபாரி பெட்ரோல் காருக்கு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதுவரை, டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார்கள் டீசல் கார்களாக மட்டுமே இருந்து வருகின்றன.

இந்த கார்களில் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை அறிமுகப்படுத்துவது, மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio-N) & எக்ஸ்யூவி700 (XUV700), ஹூண்டாய் அல்காசர் (Hyundai Alcazar) மற்றும் எம்ஜி ஹெக்டர் (MG Hector) போன்ற போட்டி கார்கள் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் இருக்கும் பிரிவில் டாடா கார்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும்.

tata harrier petrol car spotted

டாடாவின் இந்த பெட்ரோல் என்ஜின் ஆனது மஹாராஷ்டிராவின் ரஞ்சன்கானில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ்-டாடா கூட்டு ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குதான், ஹாரியர் & சஃபாரியில் தற்சமயம் வழங்கப்படும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் தயாரிக்கப்படுகிறது. மேலும், இந்த புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் எதிர்காலத்தில் ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் மெரிடியன் (Meridian) கார்களிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோற்றத்தை பொறுத்தவரையில், ஹாரியர் பெட்ரோல் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அதே டிசைன் மொழியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. காரின் பின்பக்கத்தில் தனித்துவமான இணைக்கப்பட்ட எல்இடி டெயில்-லேம்ப் பார், கருப்பு நிற பேனல்கள், கூர்மையான பாடி லைன்கள் மற்றும் பக்கவாட்டு ஃபெண்டர்களில் "HARRIER" எழுத்துகள் வழக்கமான ஹாரியர் காரில் உள்ளதை போன்று அப்படியே உள்ளன. காரின் உட்புற அமைப்பும் டிஜிட்டல் திரைகள் மற்றும் பிரீமியம் பொருட்கள் உடன் தற்போதைய ஹாரியரை ஒத்திருக்கிறது.

tata harrier petrol car spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தில் தற்போதைய ஹாரியர் காருக்கும், புதிய ஹாரியர் பெட்ரோல் காருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லாத காரணத்தினாலேயே இந்த சோதனை ஓட்டத்தில் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது. காரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாவிடினும், புதிய ஹைபீரியன் பெட்ரோல் வேரியண்ட்கள் டாடாவுக்கு ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்தை அடைய உதவும்.

இது சந்தை போட்டியில் ஹாரியரை வலுப்படுத்தும். டாடா ஹாரியர் அல்லது சஃபாரி பெட்ரோல் காரின் வெளியீடு தொடர்பாக தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. பெட்ரோல் வேரியன்ட்களின் விலைகள் டீசல் மாடல்களை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹாரியர் காரை அதன் பிரிவில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 11, 2025, 17:32 [IST]
English summary
Tata harrier petrol car spotted at dealership showroom yard aheah of launch
மேலும்... #tata motors #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X