நாடே எதிர்பார்த்தது இந்த ரெண்டு கார்களுக்கு தான்! இப்ப தேதியே சொல்லிட்டாங்க!

நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையில் டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தஇரண்டு கார்களிலும் டர்போ பெட்ரோல் இன்ஜின் கார்கள் வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் தனது சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார்களில் டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தப்போவதாக காட்சிப்படுத்தியது. அதன் பிறகு இதன் மார்கெட் அறிமுகம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன.இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் இந்த கார்கள் அறிமுகமாகிறது.

Tata Harrier amp amp Safari Petrol Versions

மார்கெட்டில் உள்ள மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்த கார்கள் வருகிறது.இந்த கார்களில் பொருத்தப்படும் இன்ஜின்களுக்கு ஹைப்பரியான் என பெயரிடப்பட்டுள்ளது.இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட முதல் காராக டாடா சியாரா கார் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வருகிறது. அதை தொடர்ந்து இந்த கார்கள் வருகிறது.

இந்த ஹைப்பரியான் டர்போ டிஜிஐ இன்ஜினை பொருத்தவரை 168 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் அதிகபட்ச பவர் 5000 ஆர்பிஎம்மிலும், அதிகபட்ச கார்க் 2000-3500 ஆர்பிஎம்மிலும் கிடைக்கிறது. இந்த இன்ஜின் பவர்ஃபுல்லான இன்ஜனாக இருக்கிறது.

Tata Harrier amp amp Safari Petrol Versions

டாடா நிறுவனம் இந்த இன்ஜினை மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இது ரகசியகமாக வைக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் அல்லது டுயல் கிளட்ச் ஆட்டோ கியர் பாக்ஸ் ஆகியவற்றில் ஏதோ ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 1.5 லிட்டர் இனனாக இருக்கும்.

சியாரா காரில் டர்போ இல்லாமல் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும். ஆனால் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களில் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். டாடா நிறுவனம் இந்த இன்ஜினை அதிக பெர்ஃபார்மென்ஸை விரும்பும் வாடிக்கையார்களுக்காக வழங்குகிறது.

Tata Harrier amp amp Safari Petrol Versions

இதற்கிடையில் ஜீப் நிறுவனத்தின் காரில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக இது இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறறது. டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் டீசல் இன்ஃஜின்களுக்க 2.0 லிட்டர் கைரோடெக் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இந்த இன்ஜின் எஃப்சிஏ தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இன்ஜின்தான். அதே போல நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜினும் எஃப்சிஏ மூலமே வாங்கப்பட்ட இன்ஜினாக இருக்க வாய்ப்புள்ளது.

பெரிய கார்களைவாங்கும் மக்கள் பலர் நல்ல ஃபெர்மென்ஸை விரும்பி டர்போ பெட்ரோல் இன்ஜினை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இந்த காரின் வருகை இந்தகாரின் விற்பனையை கணிசமாக அதிகமாக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் பெட்ரோல் இன்ஜின் கார்களை விற்பவனைக்கு கொண்டு வருவது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். அதே போல இந்நிறுவனம் தனது டீசல்இன்ஜினிலும் சில அப்டேட்களை கொண்டு வரவாய்ப்புள்ளது. விலையை பொருத்தவரை டீசல் இன்ஜின் கார்களை

More from DriveSpark

Article Published On: Wednesday, November 12, 2025, 17:45 [IST]
English summary
Tata harrier safari petrol versions launching next month india
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X