2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியா? டாடா இதுக்காக தான் வெயிட்டிங் போல!
டாடா மற்றும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனம் சேர்ந்து தமிழகத்தில் ராணிபேட்டை பகுதியில் புதிய வாகன கட்டுமான ஆலையை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு முதல் இந்த ஆலையில் தயாரிப்புகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆலையில் வேறு என்ன வாகனங்கள் எல்லாம் தயாரிக்கப்படவுள்ளன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா குழுமம் ராணிபேட்டை மாவட்டத்தில் புதிய வாகன தயாரிப்பு ஆலையை கட்டமைத்து வருகிறது. இதில் ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்களை முதலில் கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி வெளிநாட்டில் இருந்து உதிரி பாகங்களாக இறக்குமதி செய்து அந்த வாகனங்களை தமிழகத்தில் உள்ள ஆலையில் வைத்து கட்டுமானம் செய்ய உள்ளனர். இந்நிலையில் டாடா நிறுவனம் புனே ஆலையில் இப்படியாக உதிரி பாகங்களை கட்டமைக்கும் பணியை செய்து வருகிறது. அந்த பணியை செய்ய மாற்ற திட்டமிட்டு வருகிறதாக தெரிகிறது.

ஜாக்குவார் நிறுவனத்தின் எவோக் மற்றும் வெலார் ஆகிய எஸ்யூவி கார்கள் புனே ஆலையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கார்கள் கட்டமைக்கும் பணியை சென்னைக்கு மாற்ற டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கார்கள் ஆண்டிற்கு 30 ஆயிரம் கார்கள் தயாரிக்கும் அளவிற்கு அதன் கட்டமைப்பு வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ராணி பேட்டை மாவடத்தில் இந்த நிறுவனத்திற்காக மொத்தம் 470 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதல் முதல் கட்டமாக 1.70 ஏக்கர் நிலத்தில் மட்டுமே இந்த வாகன கட்டமைப்பு பணிகளை செய்ய டாடா நிறுவனம முடிவு செய்துள்ளது. முதலில் எவோக் மற்றும் வெலார் ஆகிய கார்கள் தயாரிக்கப்படும் பின்னர் டிஃபென்டர், டிஸ்கவரி போன்ற வாகனங்களில் கட்டமைப்பும் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

முதலில் மாதம் 500 கார்கள் உற்பத்தி என்ற இலக்குடன் உற்பத்தி துவங்கப்படும் என்றும், படிப்படியாக இது மாதம் 2500-3000 வாகனங்கள் வரை உற்பத்தி அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் முதல் கட்ட பணியில் தான் இவ்வளவும் இருக்கிறது. இதன் இரண்டாம் கட்ட பணிகள் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு செய்ய டாடா நிறுவனம முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த இரண்டாம் கட்ட ஆலை விரிவாகத்தில் 2.50 லட்சம் வாகன்ஙகள் ஆண்டிற்கு தயாராகும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இங்க ஜாக்குவார் மற்றும் டாடா ஆகிய இரண்டு நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் ஆட்சி மற்றும் அந்த அரசு வழங்கும் சப்போர்ட்டை பொருத்து இதை முடிவு செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. டாடா காத்திருப்பதை பார்த்தால் தமிழகத்தில் 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி என டாடா முடிவு செய்த்தது போல தெரிவதாக பலர் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
டாடா நிறுவனம் இந்தியாவில் 6 இடங்களில் தயாரிப்பு ஆலையை வைத்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூரில் தான் அந்நிறுவனம் கடந்த 1945ம் ஆண்டு முதன் முதலில் ஆலையை துவங்கியது. அங்கு தான் மிடியம் மற்றம் கனரக கமர்ஷியல் வாகனங்கள் கட்டமைக்கப்படுகின்றனர். அதை தொடர்ந்து புனோ பகுதியில் உள்ள ஆலை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி மற்றும் சின்ச்வாட் பகுதியில் ஒரு ஆலை உள்ளது. இங்கு சிஎன்ஜி வாகன கட்டுமானம் நடக்கிறது. உ.பி மாநிலம் லக்னோவில் பஸ் தயாரிப்பு ஆலை உள்ளது. உத்தரகாண்டில் உள்ள பாண்ட் நகர் ஆலையில் சிறிய கமர்ஷியல் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. குஜராத் சன் ஆலை ஹேட்ச் பேக் கார்களும், கர்நாடக மாநிலம் தார்வாத் பகுதியில் டாடா மார்கோபோலா பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் டாடா நிறுவனம் ஜாக்குவார் கார்களை தயாரிக்க எடுக்கப்பட்ட முடிவு தமிழகத்திற்கு கிடைத்த கெளரவமாக கருதப்படுகிறது. ஜாக்குவார் கார்களுக்கு உலகம் முழுவதும் மவுசு இருக்கும் நிலையில் இந்த கார்கள் தமிழகத்தில் தான் தயாராகப்போகிறது. இனி ஜாக்குவார் லேண்ட்ரோவர் கார்கள் 2026 முதல் தமிழகத்தில் தயாராக வாய்ப்புள்ளது.
Via- MoneyControl


Click it and Unblock the Notifications








