பட்டன தட்டுனா தானா பார்க் ஆகிடும்! இந்த காரின் விலை இவ்வளவு தானா? இதை எதிர்பார்க்கவேயில்லயே!

டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த கார் ரூ21.49லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் பல்வேறு அட்வாஸ்டு அம்சங்களுடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார் மக்கள் மத்தயில் நல்ல பெயர் பெற்ற காராக இருக்கிறது.இந்த காரின் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற நிலையில் மக்கள் மத்தியில் இந்தகாரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் இருக்கிறது. இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையிலும் சிறந்து விளங்கும் நிலையில் அதன் எலெக்ட்ரிக் வாகன அணிவகுப்பை விரிவாக்கும் எண்ணத்தில் ஹாரியர் இவி காரையும் அறிமுகப்படுத்த முடிவு செய்து இன்று அறிமுகம் செய்துள்ளது.

TATA Harrier ev Launch

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் காரில் முதன் முறையாக ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காராக இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் டுயல் மோட்டார் செட்டப் இருக்கிறது. ஒவ்வொரு ஆக்ஸிலுக்கும் ஒரு மோட்டார் என இநத் காரை வடிவமைத்துள்ளது.இதன் மூலம் 504 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளது. இந்த கார் எஸ்யூவி கார்களிலேயே இல்லாத வகையில் அதிக டார்க் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளது.

இந்த கார் ஆக்டி.இவி 2ம் தலைமுறை கட்டமைப்பில் உருவாக்கியள்ளது. இந்த காரின் வடிவமைப்பு பெரும்பாலும் தனது கம்பஷன் இன்ஜின் கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பகுதியில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மல்டிபிள் ஸ்பீக்கர்கள் மற்றும் சப் வூஃபர்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். இது போக 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரரில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட் பானரோமிக் சன் ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட சீட்டுகள், நேவிகேஷன், பவர்டு டெயில் கேட், ஆம்பியன்ஸ் லைட்டிங், கனெக்டெட்ட கார் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

TATA Harrier ev Launch

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பல்வேறு எலெக்ட்ரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பயணிக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 ஸ்டார்களை வாங்கும் என்பதில் எந்த விதமான அச்சமும் இல்லை. இந்த காரின் பெர்ஃபார்மென்ஸூம் சிறப்பாக இருக்கிறது. இந்த கார் 0- 100 கி.மீ வேகத்தை வெறும் 6.3 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.

இந்த காரில் பல புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த காரில் பின் சீட்டில் இருப்பவர்களே முன்சீட்டை அட்ஜெஸ்ட் செய்ய கூடிய ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஹாரியர் இவி காரில் ஸ்மார்ட் கீ வழங்கப்பட்டுள்ளது. இந்த கீயில் உள்ள பட்டனை அழுத்தினாலே இ்நத கார் தானாக ஸ்டார்ட் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும். டிரைவர் இல்லாமலேயே இயங்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் காரை டைட்டான பார்க்கிங்கில் விட வேண்டும் என்றாலும் இதில் தானாக பார்க் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

TATA Harrier ev Launch

இந்த காரில் 75 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய குவிக் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் போதும் 250 கி.மீ வரை பயணிக்க முடியும். முழு சார்ஜில் 500 கி.மீ பயணிக்கலாம். இந்த காரின் மோட்டார் திறனை மேம்படுத்துவதற்காக லிக்யூட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 20-80 சதவீத சார்ஜை ஏற்ற 25 நிமிடஙய்கள் எடுத்துக்கொள்கிறது. இந்த கார் டிசி பாஸ்ட் சார்ஜிங்கிற்காக 12 கிலோ வாட் சார்ஜரையும், ஹோம் சார்ஜிங்கிற்காக வீட்டில் சார்ஜ் ஏற்ற 7.2 கிலோ வாட் சார்ஜரும் வெளியில் செல்லும் போது சார்ஜ் ஏற்ற 3.3 கிலோ வாட் சார்ஜரும் சப்போர்ட் செய்யும்.

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ21.49 லட்சம் என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஜூலை 2ம் தேதி துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வேரியன்ட் வாரியான விலை விபரங்கள் மற்றும் மற்ற விபரங்கள் அடுத்துடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு வசதிகளை கொண்ட இந்த கார் மீது மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த கார் பலரது கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள அம்சங்களும் இதன் விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 3, 2025, 16:22 [IST]
English summary
Tata launch harrier ev price features performance booking details
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X