4ல 1 டாடாவோடதா இருக்கும்! சியாராவை வச்சு மாஸ்டர் பிளான் ரெடி!

டாடா நிறுவனம் தனது சியாரா காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.இதில் பல்வேறு இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வரப்போகிறது. இந்த வாகனங்ககள் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் விற்பனைக்கு வந்த பிறகு இந்தியாவில் விற்பனையாகும் 4 எஸ்யூவி கார்களில் ஒரு கார் டாடா நிறுவனத்தின் காராக இருக்க வேண்டும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது பிரபலமான சியாரா என்ற பெயரை பயன்படுத்தி புதிய காரை களத்தில் இறக்கியுள்ளது. இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்க வந்துள்ளது. இந்த கார் கர்வ் காரை விட சற்று மேல் போசிஷனில் விற்பனைக்க வருகிறது.

Tata Market Share

டாடா நிறுவனம் இந்த காரில் ஸ்மார்ட் +, ப்யூர், பியூர்+, அட்வெஞ்சர், அட்வெஞ்சர் +, அக்கம்பிளீஷ், அக்கம்பிளீஷ் + ஆகிய வேரயின்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கான புக்கிங் வரும் டிசம்பர் 16ம் தேதி துவங்குகிறது. இதன் டெலிவரி ஜனவரி 15ம் தேதி முதல் துவங்குகிறது.

இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த சியாரா காினர் விற்பனையின் மூலம் எஸ்யூவி விற்பனையில் தனது மார்கெட் பங்கை அதிகரிக்கும் வகையில் விற்பனையை செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 100 எஸ்யூவி கார்கள் விற்பனையாகிறது என்றால் அதில் 16-17 எஸ்யூவி கார்கள் டாடா நிறுவனத்தின் எஸ்யூவி கார்களாக உள்ளன.

Tata Market Share

இந்நிலையில் சியாரா விற்பனைக்கு வந்த பிறகு 100 எஸ்யூவி கார்கள் விற்பனையானால் அதில் 20-25 கார்கள் டாடா நிறுவனத்தின் கார்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. இந்நிறுவனம் தற்போது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 40,000 எஸ்யூவி கார்களை அந்நிறவனம் விற்பனவை செய்கிறது. டாடா நிறுவனம் சியாரா கார் விற்பனையில் 60 சதவீதம் பெட்ரோல் கார்கள் தான் விற்பனவையாகும் என எதிர்பார்க்கிறது.

இதில் 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் கார் மட்டும் 20 சதவீதம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறது. டாடா நிறுவனம் சியாரா காரில் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களை வைத்துள்ளது. அதன்படி 1.5 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல், 160 பிஎஸ் பவர் மற்றும் 155 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. அடுத்தாக பிரபலமான 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது.இது 120 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இறுதியாக 1.5 லிட்டர் நேச்சுரலி எஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 106 பிஎஸ் பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிபடுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இந்த இன்ஜின்கள் எல்லாம் 6 ஸ்படு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக், டிசிடி கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் இந்த காரை ARGOS மாடுலர் பிளாட்ஃபார்மில் உரவாக்கியுள்ளது. இது நவீன பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய காராக இருக்கிறது. சமீபத்தில் இரண்டு கார்களை மோதவிட்டு இந்த காரின் உறுதி தன்மை குறித்த விபரங்களை எடுத்து கூறியிருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் எஸ்யூவி கார்கள் மீது மக்கள் அதிக மோகம் கொள்ள துவங்கிவிட்ட நிலையில் இந்த ரக கார்களை அதிகம் கொண்டு வந்து விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிச்சயம் இந்த கார்கள் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 28, 2025, 17:00 [IST]
English summary
Tata market share new sierra suv growth target
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+