பழசு ஆயிடுச்சுனு காரை ஓரங்கட்டினாலும், பேட்டரியை எடுத்து யூஸ் பண்ணலாம்! டாடாவிடம் இருந்து வந்த அறிவிப்பு!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதை 2020ஆம் ஆண்டில் இருந்தே பார்த்து வருகிறோம். நெக்ஸான் இவி (Nexon EV) எலக்ட்ரிக் கார் மூலமாக துவங்கிய டாடா மோட்டார்ஸின் இந்த பயணம் தற்போது 4,5 எலக்ட்ரிக் கார்கள் உடன் சென்றுக் கொண்டிருக்கிறது. கடைசியாக, ஹெரியர் இவி (Harrier EV) எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
டாடாவின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காராக ஹெரியர் இவி களமிறக்கப்பட்டு உள்ளது. ஹெரியர் இவி எலக்ட்ரிக் காருக்கு அடுத்ததாக கர்வ் இவி மற்றும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்கள் டாடாவின் விலைமிக்க எலக்ட்ரிக் கார்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், டாடா கர்வ் இவி மற்றும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்களை வாங்கும் கஸ்டமர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்கினாலும், உண்மையில் டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதனை சமாளிக்கும் முயற்சியாகவே, ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரை சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.
அத்துடன், தற்போது கர்வ் இவி மற்றும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்களை வாங்குவோருக்கு முழு ஆயுட்கால உத்தரவாதத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இந்த இரண்டில் விலை குறைவான எலக்ட்ரிக் காரான நெக்ஸான் இவி காரில் 30kWh மற்றும் 45kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அதேபோல், கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் 45kWh மற்றும் 55kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. நெக்ஸான் இவி மற்றும் கர்வ் இவி என இரு எலக்ட்ரிக் கார்களிலும் வழங்கப்படும் பொதுவான பேட்டரி ஆப்ஷன் என்றால், அது 45kWh பேட்டரி ஆப்ஷன் ஆகும். இந்த 45kWh பேட்டரி ஆப்ஷனுடன் இந்த இரு டாடா எலக்ட்ரிக் கார்களை வாங்குவோருக்கு காரின் பேட்டரிக்கு முழு ஆயுட்கால உத்தரவாதம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை 'ஆயுட்கால அதி-மின்னழுத்த பேட்டரிக்கான உத்தரவாதம்' என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அழைக்கிறது. இந்த முழு ஆயுட்கால பேட்டரி உத்தரவாதம் ஆனது முதலாவதாக ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரை வாங்குவோர் மத்தியில் இந்த உத்தரவாதத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது அது நெக்ஸான் இவி மற்றும் ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார்களுக்கும் தொடரப்பட்டுள்ளது.
புதியதாக வாங்குவோருக்கு மட்டுமில்லாமல், டாடா நெக்ஸான் இவி மற்றும் கர்வ் இவி எலக்ட்ரிக் கார்களை ஏற்கனவே வாங்கியோருக்கும் முழு ஆயுட்கால பேட்டரி உத்தரவாதம் கிடைக்கும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முழு ஆயுட்கால பேட்டரி உத்தரவாத அறிவிப்புடன், நெக்ஸான் இவி மற்றும் கர்வ் இவி எலக்ட்ரிக் கார்களின் ஓனர்கள் மீண்டும் ஒரு டாடா எலக்ட்ரிக் காரை வாங்கும்போது நேரடியாக ரூ.50,000 விலை தள்ளுபடியை பெறலாம் எனவும் டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் இந்த நடவடிக்கை ஆனது அதன் எலக்ட்ரிக் கார்களை செகண்ட்-ஹேண்டில் விற்கும்போது நல்ல மதிப்பை பெற்று தருவதுடன், மற்றவர்களுக்கும் டாடா எலக்ட்ரிக் கார்கள் மீதும், அவற்றின் பேட்டரியின் மீதும் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது உறுதி. இதன் மூலமாக, நெக்ஸான் இவி மற்றும் கர்வ் இவி எலக்ட்ரிக் கார்களின் 45kWh பேட்டரியில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதனை இலவசமாக சரிச்செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Source: Tata Motors (https://www.tatamotors.com/newsroom/press-releases/)


Click it and Unblock the Notifications








