ஜிஎஸ்டியால் விலை குறைச்சது பத்தாதுனு சலுகை வேறயா! டாடா அறிவிப்பால் எத்தனை பேர் புது தொழில் துவங்க போறாங்களோ!
இந்தியாவின் முன்னணி வர்த்தக (Commercial) வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் சிறிய ரக கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனங்களுக்கான சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி (GST) திருத்தத்தால் டாடா கமர்ஷியல் வாகனங்களின் விலைகள் சமீபத்தில்தான் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அவற்றுள் குறிப்பிட்ட வாகனங்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசாங்கத்தின் புதிய ஜிஎஸ்டி 2.0 திருத்தத்தால் இந்தியாவில் ஆட்டோமொபைல் (Automobile) வாகனங்களுக்கான ஜிஎஸ்டி கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், மற்ற வாகன நிறுவனங்களை போன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் வாகனங்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி கார்களின் விலைகளை மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்களின் விலைகளையும் டாடா நிறுவனம் குறைத்துள்ளதை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

இந்த நிலையில், ஜிஎஸ்டி திருத்தத்தால் கொண்டுவரப்பட்டுள்ள விலை குறைப்பு மட்டுமில்லாமல், தனது சிறிய ரக கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் பிக்-அப் டிரக் வாகனங்களுக்கு என தனியாக பிரத்யேகமாக சிறப்பு சலுகைகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 'இந்த பண்டிகைக்கு பரிசு' (Is Tyohar Pe Uphaar) என்கிற பெயரில் இந்த சலுகையை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, டாடா ஏஸ் (Ace), இன்ட்ரா (Intra) மற்றும் யோதா (Yodha) உள்ளிட்ட சிறிய ரக கமர்ஷியல் வாகனங்களுக்கு 32 அங்குல எல்இடி டிவி பரிசுகள் மற்றும் ரூ.65,000 வரையிலான கூடுதல் வாடிக்கையாளர் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. செப்டம்பர் 30 வரையில் இந்த குறுகிய கால சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு சலுகைகள் பெட்ரோல், டீசல் மற்றும் பை-ஃபியுல் (Bi-fuel) என எந்த எரிபொருள் என்ஜின் ஆப்ஷன் உடனும் மேற்கூறப்பட்ட வாகனங்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸின் சிறிய ரக கமர்ஷியல் வாகன பிரிவில் உள்ள நான்கு முக்கிய மாடல்களை இந்த சலுகை உள்ளடக்கி உள்ளது.
இதில், டாடா ஏஸ் ப்ரோ (Ace Pro) வாகனத்தின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஜிஎஸ்டி குறைப்பால் ரூ.3.67 லட்சமாகவும், ஏஸ் வாகனத்தின் புதிய விலை ரூ.4.42 லட்சமாகவும், இன்ட்ராவின் புதிய விலை ரூ.7.41 லட்சமாகவும், யோதாவிற்கு ரூ.9.16 லட்சம் ஆரம்ப விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

| Product | New Prices* (Rs.) |
|---|---|
| Ace Pro | 3,67,000 onward |
| Ace | 4,42,000 onward |
| Intra | 7,41,000 onward |
| Yodha | 9,16,000 onward |
இவ்வாறு குறைக்கப்பட்ட புதிய விலைகள் மற்றும் சலுகைகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் வாகனங்களை முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் டெலிவிரி செய்யப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த குறுகிய கால சலுகை ஆனது பண்டிகை கால விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் வகுத்துள்ள ஒரு உத்தியாகும். ஜிஎஸ்டி குறைப்புகள் அறிவிக்கப்பட்ட பிறகும், சலுகையாக விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது புதியதாக தொழில் தொடங்க அல்லது விரிவாக்க திட்டமிட்டுவரும் தொழில்முனைவோருக்கு உதவியாக இருக்கும் என டாடா நிறுவனம் நம்பிக்கை உடன் தெரிவிக்கிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் கமர்ஷியல் வாகனத் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், இந்த புதிய முயற்சி மூலம் வளர்ந்து வரும் சிறிய வர்த்தக வாகனப் பிரிவை குறி வைக்கிறது. இவ்வாறான சிறிய கமர்ஷியல் வாகனங்கள், நாட்டில் லாஸ்ட்-மைல் டெலிவிரி (Last-mile Delivery) மற்றும் சிறு வணிகப் போக்குவரத்துத் தேவைகளுக்கு முதுகெலும்பாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications









