டாடா கார் கனவை நிஜமாக்க நேரம் வந்தாச்சு... என்னங்க சொல்றீங்க, மாதம் ரூ.5,000 செலுத்தினால் போதுமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பயணிகள் வாகன நிறுவனம், புதியதாக அதன் கார்களுக்கான ஆண்டு இறுதி நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது. கார் விற்பனையை அதிகரிக்கவும், கார் வாங்குவதை எளிதாக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சிறப்புச் சலுகைகளின் கீழ், வாடிக்கையாளர்கள் ரூ.4,999 முதல் தொடங்கும் மாதத் தவணைகளில் (EMI) டாடா கார்களை வாங்கலாம்.

டாடாவின் எரிபொருள் என்ஜின் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) என இரண்டிற்கும் வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் டிசம்பர் 31, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும். இதன்படி, டாடா டியாகோ (Tiago) காருக்கு மாதத் தவணை ரூ.4,999-இல் இருந்து தொடங்குகிறது. டாடா டிகோர் (Tigor) மற்றும் பன்ச் (Punch) ஆகிய இரண்டிற்கும் மாதத் தவணை ரூ.5,999 முதல் தொடங்குகிறது.

tata motors announces new offers

அதேபோல், டாடா அல்ட்ராஸ் (Altroz) காருக்கு ரூ.6,777 ஆகவும், நெக்ஸான் (Nexon) காருக்கு ரூ.7,666 ஆகவும், கர்வ் காருக்கு ரூ.9,999 ஆகவும் குறைந்த புதிய மாதத் தவணை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த கார்களின் எலெக்ட்ரிக் வெர்சன்களுக்கான புதிய குறைந்த மாதத்தவணை திட்டங்கள் சற்று வேறுப்படுகின்றன. டாடா டியாகோ.இவி எலெக்ட்ரிக் காருக்கு, பெட்ரோல் டியோகோவை போன்று மாதத் தவணை ரூ.5,999-இல் இருந்து தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து, பன்ச்.இவி எலெக்ட்ரிக் காருக்கு ரூ.7,999 ஆகவும், நெக்ஸான்.இவி எலெக்ட்ரிக் காருக்கு ரூ.10,999 ஆகவும் குறைந்த மாதத் தவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாடா கர்வ்.இவி எலெக்ட்ரிக் காரின் மாதத் தவணை ரூ.14,555 இருந்து துவங்குகிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுகக்கூடியதாகிறது.

tata motors announces new offers

இங்கு குறிப்பிடப்பட்ட டாடா பெட்ரோல்/ டீசல் கார்களுக்கான குறைந்த மாதத் தவணை திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கடன் தொகைக்கானது ஆகும். சுமார் 84 மாதங்கள் (7 வருடங்கள்) வரையில் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை வழங்கும் இந்த குறைந்த மாதத் தவணை திட்டத்தில் 25% அல்லது 30% கடன் தொகையை ஒரே நேரத்தில் மொத்தமாக செலுத்தும் பலூன் திட்ட வசதி உடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான மாதத் தவணைகள் 120 மாதங்கள் கொண்ட நீண்ட கால திருப்பி செலுத்துதல் திட்டத்தின் கீழ் கணக்கிடப்படும். இந்த நிதி சலுகைகள் அனைத்தும் நிதி நிறுவனத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டவை. உண்மையான மாதத் தவணைத் தொகைகள் ஆனது கடன் தொகை மற்றும் வாகனத்தின் சாலை விலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம்.

tata motors announces new offers

மேலும், இந்தச் சலுகைகளுக்கு கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் பொருந்தும் என அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனம், இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வாகன உற்பத்தியாளராகவும், பயணிகள் கார்கள் துறையில் மூன்றாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதன் கார்கள் வரிசையில் பல்வேறு எரிபொருள் ஆப்ஷன்கள் மற்றும் பாடி ஸ்டைல்களைக் கொண்ட கார்கள் உள்ளன. இவை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கனெக்டட் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளன. தற்போது குறைந்த மாதத்தவணை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது இந்த கார்களை மக்கள் இன்னும் எளிதாக சொந்தமாக்க உதவும்.

Model Type Starting EMI (per month)
Internal Combustion Engine (ICE)
Tiago ICE Rs. 4,999
Tigor ICE Rs. 5,999
Punch ICE Rs. 5,999
Altroz ICE Rs. 6,777
Nexon ICE Rs. 7,666
Curvv ICE Rs. 9,999
Electric Vehicles (EV)
Tiago.ev EV Rs. 5,999
Punch.ev EV Rs. 7,999
Nexon.ev EV Rs. 10,999
Curvv.ev EV Rs. 14,555

டாடாவின் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் மகாராஷ்டிராவின் புனே மற்றும் குஜராத்தின் சனந்த் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3,500க்கும் மேற்பட்ட விற்பனை, சேவை மற்றும் உதிரிபாக மையங்களைக் கொண்ட ஒரு பரந்த விநியோக நெட்வொர்க்கை கொண்டுள்ளது. டாடாவின் இந்த உள்கட்டமைப்பு 195 நகரங்களில் 250க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை உள்ளடக்கியது ஆகும்.

இது 27 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்தியாவின் வாகனத் துறையில் இது மூன்றாவது பெரிய விற்பனை & சேவை நெட்வொர்க் ஆகும். டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆனது டாடா மோட்டார்ஸ் பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒரு துணை நிறுவனமாகும். இதன் எலெக்ட்ரிக் கார்கள் டாடாவின் சொந்தமான சிப்ட்ரான் (Ziptron) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 18, 2025, 22:28 [IST]
English summary
Tata motors announces new special december emi offers check all details here
மேலும்... #tata motors #emi #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X