1990களில் கொடி கட்டி பறந்த கார் மறுபடியும் வருது! விலை இவ்ளோதானா! மாருதி மார்க்கெட் மொத்தமா க்ளோஸ் ஆக போகுது!

நடப்பு 2025ம் ஆண்டின் அக்டோபர் மாதம் முடிவடைந்து, நவம்பர் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த நேரத்தில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தற்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒட்டுமொத்தமாக 74,705 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமான கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் (Top 10 Car Brands October 2025) டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது.

Tata Sierra EV Front Profile

இந்த பட்டியலில், வழக்கம் போல் முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 2,38,515 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம், மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களை வீழ்த்தி, டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் 66,800 கார்கள் விற்பனையுடன் மஹிந்திரா நிறுவனம் 3வது இடத்தையும், 65,045 கார்கள் விற்பனையுடன் ஹூண்டாய் நிறுவனம் 4வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த 2 நிறுவனங்களையும் வீழ்த்தி 2வது இடம் பிடித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 14 கார்களை விற்பனை செய்து வருகிறது.

Tata Punch

இதில், டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா பன்ச் (Tata Punch), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா கர்வ் (Tata Curvv), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய 8 கார்கள் ஐசி இன்ஜின் மூலம் இயங்குபவை ஆகும்.

இதில், அல்ட்ராஸ் மற்றும் சஃபாரி தவிர, எஞ்சிய 6 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆக மொத்தத்தில் 14 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் 15வது காரான டாடா சியரா (Tata Sierra) விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2025 டாடா சியரா வரும் நவம்பர் 25ம் தேதி (November 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனில் (பெட்ரோல்/டீசல்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதன் பின்னர் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. இதில், டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை அனேகமாக 10 அல்லது 11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த டாடா சியரா மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதால், அதன் நேரடி போட்டி மாடல்களாக கருதப்படும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடி ஏற்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனும், அதை தொடர்ந்து, அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், வரும் காலங்களில், இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 1, 2025, 13:51 [IST]
English summary
Tata motors beat mahindra and hyundai in october 2025 sales reports
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+