நடிகர் கமலஹாசனும் இந்த டாடா மோட்டார்ஸும் ஒன்னு போல.. மாஸான சம்பவத்தை செய்துட்டு ஒன்னுமே தெரியாதத போல இருக்கு!
நடிகர் கமலஹாசன் வருஷத்துக்கு ஒன்றிரண்டு படத்தை மட்டுமேக் கொடுத்தாலும் அது செம்ம மாஸான படமாக இருக்கும். இவரை போலவே ஓர் கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது. அது வேறு யாரும் இல்லை நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஸே அதுவாகும். இந்த நிறுவனம் பொதுவாக மூன்றாவது இடத்தையே, அதிகம் கார்களை விற்பனைச் செய்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடிக்கும். அதற்காக எப்போதும் இந்த இடத்திலேயே டாடா மோட்டார்ஸ் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
அவ்வப்போது அது இரண்டாவது இடத்தையும் அலங்கரிக்கும். அவ்வாறு அது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் பொழுது மிகப் பெரிய அதிர்வலையையும், தாக்கத்தையும் அது சந்தையில் ஏற்படுத்தும். அந்த மாதிரியான ஓர் தரமான நிகழ்வையே சென்ற ஆண்டின் இறுதியில் அரங்கேற்றி இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ்.

நிறுவனம் வருடத்தின் இறுதியை மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியுடன் முடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அது ஹூண்டாயை பின்னுக்கு தள்ளி, அதிகம் கார்களை விற்பனைச் செய்த நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த மார்க்கெட்டின் கவனத்தையும் டாடா மோட்டர்ஸ் தன் பக்கம் ஈர்த்திருக்கின்றது.
2024 டிசம்பரில் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகனங்கள் மட்டுமே 44,221 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இது சென்ற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 1.7 சதவீதம் அதிகம் விற்பனையாகும். அதாவது, 43,471 யூனிட்டுகள் மட்டுமே அப்போது விற்பனையாகி இருந்தன.
இந்த விற்பனை வளர்ச்சியைத் தொடர்ந்தே டாடா மோட்டார்ஸ், ஹூண்டாயை அதன் இரண்டாவது இடத்தில் கீழே தள்ளிவிட்டு இருக்கின்றது. அதாவது, டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டு, ஹூண்டாயை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டிருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகியவையே 2024 டிசம்பரில் மிக அதிகளவில் விற்பனையாகி இருக்கின்றன.
அதேவேளையில், ஹூண்டாய் நிறுவனத்தின் பயணிகள் கார்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் 42,208 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றது. இது சென்ற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவான யூனிட் விற்பனையாகும். 1.3 சதவீதம் வரையிலேயே அது விற்பனை வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றது.
எப்போதும்போல் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களாக 2024 டிசம்பரிலும் கிரெட்டா, வென்யூ, எக்ஸ்டர் மற்றும் கிராண்ட் ஐ10 ஆகியவையே உள்ளன. இதில், கிரெட்டாவே விற்பனையில் முன்னணியில் உள்ளது. வருடத்தின் இறுதியில் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை வாகன உற்பத்தியாளர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வழங்கினர்.
அந்தவகையில், ஹூண்டாயும் கணிசமான சலுகைகளை அதன் தயாரிப்புகள் சிலவற்றிற்கு வழங்கியது. இருப்பினும், ஹூண்டாயால் டாடாவை ஆண்டின் இறுதியில் விற்பனையில் முந்த முடியவில்லை. டாடா மோட்டார்ஸைத் தொடர்ந்து விரைவில் இந்த நிறுவனம் மஹிந்திராவிடமும் விற்பனையில் அடிவாங்குமோ என்கிற சந்தேகமே பலருக்கும் எழும்பி இருக்கின்றது.
இதற்கேற்ப மிகவும் வலுவான விற்பனை வளர்ச்சியை மஹிந்திரா நாட்டில் சந்தித்து வருகின்றது. அந்தவகையில், 2024 டிசம்பரில் மட்டுமே மஹிந்திரா கார்கள் 41 ஆயிரத்து 424 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. எனவே சீக்கிரமே ஹூண்டாய் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்போதும்போல் 2024 டிசம்பரில் கார்கள் விற்பனையில் முதல் இடத்தை மாருதி சுஸுகியே ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே இரண்டாவது இடத்தில் டாடா மோட்டார்ஸும், மூன்றாவது இடத்தை ஹூண்டாயும் பிடித்திருக்கின்றன. தரமான சம்பவத்தை நிகழ்த்திவிட்டு ஒன்னுமே தெரியாதைத போல டாடா இருக்கின்றது. மேலும், தன்னுடைய இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு இந்த புதிய ஆண்டில் சில புதுமுக கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்க உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









