திடீரென டாடா கார்களை அதிகம் வாங்க குவியும் மக்கள்! குறிப்பா இந்த காருக்கு செம்ம டிமாண்ட்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், நடந்து முடிந்த கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில், டாடா நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விடவும் (YoY), கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தை விடவும் (MoM) கணிசமான விற்பனை வளர்ச்சியை கடந்த செப்டம்பரில் பதிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டி (GST) விகித மாற்றங்கள் மற்றும் பண்டிகை காலம் (Festival Time) ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தம் 59,667 கார்களை விற்றுள்ளது. இது 2024 செப்டம்பர் மாதத்தில் டாடா விற்ற 41,065 கார்களை விட 45% அதிகமாகும்.

tata motors cars sales report

2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் விற்பனை 46% அதிகரித்து 41,001 கார்களில் இருந்து உயர்ந்துள்ளது. இந்திய கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு 2024 செப்டம்பரில் 11.4% ஆக இருந்தது, தற்போது அது 15.8% ஆக அதிகரித்துள்ளது. டாடா நெக்ஸான் (Tata Nexon) டாடா நிறுவனத்தின் சிறந்த விற்பனை காராக அமைந்தது மட்டுமன்றி, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் அதிகம் விற்பனையான பயணிகள் வாகனமாக முதலிடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவை விட நெக்ஸான் கணிசமான வித்தியாசத்தில் விற்பனையில் முன்னிலை பெற்றுள்ளது. நெக்ஸான் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பரை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்து 22,571 கார்களை எட்டியுள்ளது. இது சுமார் 97% வளர்ச்சியைக் குறிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போதும், மாதாமாதம் விற்பனை 61% உயர்ந்துள்ளது.

tata motors cars sales report

இரண்டாவது இடத்தில் டாடா பஞ்ச் (Punch) 15,891 கார்கள் விற்பனை உடன் உள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரை விட 16% மற்றும் முந்தைய ஆகஸ்ட் மாதத்தை விட 48% முன்னேற்றமாகும். இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள டியாகோ (Tiago) விற்பனை 8,322 கார்களுடன் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 97% வளர்ச்சியைக் காட்டுகிறது. டியாகோவின் மாதாமாதம் விற்பனை 59% உயர்ந்துள்ளது. இதேபோல், டாடா ஹாரியர் (Harrier) காருக்கான தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 4,181 ஹாரியர் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட 161% அதிகமாகும். மாதாமாதம் விற்பனை 35% அதிகரித்துள்ளது.

tata motors cars sales report

ஐந்தாவது இடத்தில் டாடா அல்ட்ரோஸ் (Altroz) உள்ளது. இதன் விற்பனை 4,168 கார்களாக உயர்ந்து, கடந்த 2024 செப்டம்பரை விட 51% வளர்ச்சியை பெற்றுள்ளது. மாதாமாதம் விற்பனை 5% மட்டுமே அதிகரித்துள்ளது. டாடா சஃபாரி (Safari) கடந்த மாதம் 2,000 கார்கள் விற்பனை உடன் நிலையான விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

இது 2024 செப்டம்பரை விட 22% மற்றும் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தை விட 34% முன்னேற்றமாகும். டாடா கர்வ் (Curvv) மட்டுமே ஆண்டு மற்றும் மாதாமாதம் என இருவிதமான ஒப்பீடுகளிலும் சரிவை சந்தித்துள்ளது. இதன் விற்பனை 1,566 கார்களாகக் குறைந்து, 67% ஆண்டு சரிவையும், 8% மாத சரிவையும் கண்டுள்ளது.

tata motors cars sales report

டாடா டிகோர் (Tigor) 966 கார்கள் விற்பனை உடன் நேர்மறையாக செப்டம்பர் மாதத்தை முடிந்துள்ளது. இது 2024 செப்டம்பரை விட 8% வளர்ச்சியும், 2025 ஆகஸ்ட்டை விட 20% வளர்ச்சியும் ஆகும். கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மட்டுமின்றி, 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலும் டாடா மோட்டார்ஸ் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

2025 ஜூலை- செப்டம்பர் வரையிலான இந்த காலாண்டில் மொத்தம் 1,38,709 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்றுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலாண்டில் விற்கப்பட்ட 1,30,519 டாடா கார்களை விட 6.3% அதிகம் ஆகும். நெக்ஸான் (இவி உட்பட) 49,402 கார்கள் விற்பனையுடன் இந்த லிஸ்ட்டிலும் முன்னணியில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெக்ஸான், டியாகோ, அல்ட்ரோஸ் மற்றும் ஹாரியர் போன்ற மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி உள்ளன. பஞ்ச், கர்வ், சஃபாரி மற்றும் டிகோர் போன்ற டாடா கார்களின் விற்பனை தற்காலிகமாகவே சரிந்துள்ளதாக கருதுகிறோம். குறிப்பாக, டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) தற்போது சோதனை ஓட்டங்களில் உள்ளதால், அதன் அறிமுகத்திற்கு பின் பன்ச் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 12, 2025, 5:00 [IST]
English summary
Tata motors cars wise sales report of 2025 september check all details here
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X