ஒரே மாதத்தில் 22 ஆயிரம் பேர் வாங்கிய டாடா கார் இதுதான்! இந்தியாவிலேயே வேறெந்த காரும் இல்ல!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் 2025 நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் கார்கள் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 57,436 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டு, 2024 நவம்பரில் விற்பனையான 47,063 டாடா கார்களுடன் ஒப்பிடுகையில் 22.04% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எனினும், 2025 அக்டோபரில் பதிவான 61,134 டாடா கார்கள் விற்பனை உடன் ஒப்பிடுகையில் மாதம்-டூ-மாதம் விற்பனை 6.05% குறைந்துள்ளது. அக்டோபரில் பண்டிகை கால தேவை & சலுகைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 திருத்தம் உள்ளிட்டவை டாடா கார்கள் மட்டுமன்றி, மற்ற நிறுவனங்களின் கார்களின் விற்பனையையும் அதிகரித்துள்ளன.

tata motors cars-wise sales report

டாடா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு அதன் நெக்ஸான் (Nexon), பன்ச் (Punch) மற்றும் ஹாரியர் இவி (Harrier EV) ஆகிய கார்கள் முக்கிய காரணிகளாக அமைந்தன. குறிப்பாக, நெக்ஸான் (நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் உட்பட) ஆனது டாடா நிறுவனத்திற்கு மட்டுமன்றி, கடந்த நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

கடந்த மாதத்தில் 22,434 நெக்ஸான் கார்கள் விற்பனையாகி, 2024 நவம்பரை விட 46.35% வளர்ச்சியையும், 2025 அக்டோபரை விட 1.59% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. நெக்ஸானுக்கு அடுத்துள்ள பன்ச் (பன்ச் இவி உட்பட) கடந்த மாதத்தில் 18,753 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

tata motors cars-wise sales report

பன்ச் காரின் விற்பனை 2024 நவம்பரை விட 21.50% வளர்ச்சியையும், 2025 அக்டோபரை விட 11.56% வளர்ச்சியையும் பதிவு செய்து, சந்தையில் அதன் வலுவான தேவையை உறுதிப்படுத்தி உள்ளது. விலை குறைவான டாடா ஹேட்ச்பேக் காரான டியாகோ (Tiago) (டியாகோ இவி உட்பட) 5,988 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. டியாகோவின் விற்பனை 2024 நவம்பரை காட்டிலும் 12.58% அதிகரித்தாலும், 2025 அக்டோபரை விட 32.34% சரிந்துள்ளது.

டாடா மோட்டார்ஸில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றான ஹாரியர் (ஹாரியர் இவி உட்பட) 2025 நவம்பர் மாதத்தில் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த மாதத்தில் 3,771 யூனிட்கள் விற்பனையாகி, 2024 நவம்பரை விட சுமார் 174.45% வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், 2025 அக்டோபரை விட ஹாரியரின் விற்பனை 15.88% குறைந்துள்ளது.

இருப்பினும், ஹாரியரின் இந்த வளர்ச்சி, டாடாவின் பெரிய எஸ்யூவி கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிகரித்து வரும் வாடிக்கையாளர் அங்கீகாரத்தைக் காட்டுகிறது. அல்ட்ராஸ் (Altroz) 3,013 யூனிட்கள் விற்பனையாகி 2024 நவம்பரை காட்டிலும் 44.65% வளர்ச்சி உடன் இந்த வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் 2025 அக்டோபரை விட இதன் விற்பனை 20.08% குறைந்துள்ளது.

No Tata Nov-25 Nov-24 Diff Growth % YoY % Share Nov 25
1 Nexon / EV 22,434 15,329 7,105 46.35 39.06
2 Punch / EV 18,753 15,435 3,318 21.50 32.65
3 Tiago / EV 5,988 5,319 669 12.58 10.43
4 Harrier / EV 3,771 1,374 2,397 174.45 6.57
5 Altroz 3,013 2,083 930 44.65 5.25
6 Safari 1,895 1,563 332 21.24 3.30
7 Curvv / EV 1,094 5,101 -4,007 -78.55 1.90
8 Tigor / EV 488 859 -371 -43.19 0.85
- Total 57,436 47,063 10,373 22.04 100.00
No Tata Nov-25 Oct-25 Diff Growth % MoM % Share Oct 25
1 Nexon / EV 22,434 22,083 351 1.59 36.12
2 Punch / EV 18,753 16,810 1,943 11.56 27.50
3 Tiago / EV 5,988 8,850 -2,862 -32.34 14.48
4 Harrier / EV 3,771 4,483 -712 -15.88 7.33
5 Altroz 3,013 3,770 -757 -20.08 6.17
6 Safari 1,895 2,510 -615 -24.50 4.11
7 Curvv / EV 1,094 1,432 -338 -23.60 2.34
8 Tigor / EV 488 1,196 -708 -59.20 1.96
- Total 57,436 61,134 -3,698 -6.05 100.00

விலையுயர்ந்த டாடா காரான சஃபாரியின் விற்பனை 1,895 யூனிட்களை எட்டி, 2024 அக்டோபரை விட 21.24% வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், 2024 அக்டோபரை விட 24.50% சரிவை சந்தித்துள்ளது. கர்வ் (கர்வ் இவி உட்பட) 1,094 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, கடந்த ஆண்டு நவம்பரை விட 78.55% சரிவையும், 2025 அக்டோபரை விட 23.60% சரிவையும் கண்டுள்ளது.

டிகோர் (Tigor) (டிகோர் இவி உட்பட) 488 யூனிட்கள் விற்பனை உடன் அதன் சரிவுப் போக்கை கடந்த மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இதன் விற்பனை 2024 நவம்பரை விட 43.19% மற்றும் 2025 அக்டோபரை விட 59.20% குறைந்துள்ளது. இது காம்பாக்ட் செடான் கார்கள் பிரிவில் டிகோரின் தேவை குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தத்தில், டாடாவின் 2025 நவம்பர் மாத விற்பனை புள்ளி விவரங்கள், அதன் எஸ்யூவி கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களினால் அடைந்த குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைக் காட்டுகின்றன. இதில், நெக்ஸான், பன்ச் மற்றும் ஹாரியர் இவி கார்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இருப்பினும், கர்வ் காரின் விற்பனை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருவது டாடா நிறுவனத்திற்கு நிச்சயம் கவலையளிக்க கூடிய விஷயமாகவே இருக்கும். இது ஆரம்பகால வரவேற்பிற்குப் பிறகு கர்வ் காரின் விற்பனை குறைந்து வருவதைக் குறிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 11, 2025, 22:19 [IST]
English summary
Tata motors cars wise sales report of november 2025 nexon and punch top on list
மேலும்... #tata motors #car sales #tata nexon #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+