ஒரே மாதத்தில் எல்லாம் மாறிடுச்சு... டாடா கார்களுக்கு கஸ்டமர்ஸ் வர மாட்றாங்கனு யாருங்க சொன்னா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனையில் சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஒரு மாத காலகட்டத்தில் இந்திய பயணிகள் கார் சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக டாடா நிறுவனமும் கணிசமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களுக்கு அடுத்து, டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2024 அக்டோபரில் 12.1% ஆக இருந்த டாடா மோட்டார்ஸின் சந்தைப் பங்கு, 2025 அக்டோபரில் 13.1% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் கார்கள் வாங்கிய 1000 பேரில் 131 பேர் டாடா கார்களை வாங்கியுள்ளனர்.

tata motors cars-wise sales report

2025 அக்டோபரில் டாடா மோட்டார்ஸின் மொத்த கார்கள் விற்பனை எண்ணிக்கை 61 ஆயிரத்து 134 யூனிட்கள் ஆகும். அதுவே, 2024 அக்டோபரில் 48 ஆயிரத்து 133 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு அக்டோபரை விட இந்த ஆண்டு அக்டோபரில் விற்பனையான டாடா கார்களின் எண்ணிக்கை 27% அதிகம் ஆகும்.

அதேபோல், கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 59 ஆயிரத்து 667 கார்களுடன் ஒப்பிடுகையிலும் கடந்த அக்டோபரில் டாடா கார்கள் விற்பனை 2% அதிகரித்துள்ளது. டாடா நெக்ஸான் (Nexon), டாடா மோட்டார்ஸின் கடந்த மாத விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது மட்டுமல்லாமல், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராகவும் முதலிடத்தை பிடித்துள்ளது.

tata motors cars-wise sales report

கடந்த மாதம் 22 ஆயிரத்து 83 யூனிட்கள் விற்பனையான நெக்ஸான், முந்தைய ஆண்டின் இதே அக்டோபர் மாதத்தில் விற்பனையான 14 ஆயிரத்து 759 யூனிட்களை விட 50% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், 2025 செப்டம்பரில் விற்பனையான 22 ஆயிரத்து 573 நெக்ஸான் கார்களுடன் ஒப்பிடுகையில், மாதாந்திர விற்பனை 2% சரிந்துள்ளது.

டாடா பன்ச் (Punch) 16 ஆயிரத்து 810 யூனிட்கள் விற்பனையுடன் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 2024 அக்டோபரை காட்டிலும் விற்பனையில் 7% வளர்ச்சியையும், 2025 செப்டம்பரை காட்டிலும் 6% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. 2024 அக்டோபர் மற்றும் 2025 செப்டம்பரில் முறையே 15 ஆயிரத்து 740 மற்றும் 15 ஆயிரத்து 891 பன்ச் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

tata motors cars-wise sales report

புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காருக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையில், வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல மாற்றங்கள் உடன் புதிய பன்ச் உருவாக்கப்பட்டு வருகிறது. பன்ச் காருக்கு அடுத்து இந்த வரிசையில் டியாகோ மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் விற்பனை 2024 அக்டோபரை விட 89% அதிகரித்து 8 ஆயிரத்து 850 யூனிட்களை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 4 ஆயிரத்து 682 டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இது, 8 ஆயிரத்து 322 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2025 செப்டம்பர் மாதத்தை விடவும் 6% உயர்ந்துள்ளது. டாடா ஹாரியர் காரின் விற்பனையும் கடந்த மாதத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

tata motors cars-wise sales report

2024 அக்டோபரில் ஆயிரத்து 947 ஹாரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் 130% அதிகரித்து 4 ஆயிரத்து 483 யூனிட்களாக பதிவாகி உள்ளது. அதேபோல், 2025 செப்டம்பர் மாத விற்பனை உடன் ஒப்பிடுகையிலும் 7% வளர்ச்சியுடன் ஹாரியரின் விற்பனை டாடா நிறுவனத்துக்கு சாதகமாக முடிந்துள்ளது. இது இல்லாமல், 3,770 அல்ட்ராஸ் கார்கள், 2,510 சஃபாரி கார்கள், 1,432 கர்வ் கார்கள் மற்றும் 1,196 டிகோர் கார்களையும் கடந்த அக்டோபர் மாதத்தில் டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

No Tata Oct-25 Oct-24 Diff Growth % YoY % Share Oct 25
1 Nexon / EV 22,083 14,759 7,324 49.62 36.12
2 Punch / EV 16,810 15,740 1,070 6.80 27.50
3 Tiago / EV 8,850 4,682 4,168 89.02 14.48
4 Harrier / EV 4,483 1,947 2,536 130.25 7.33
5 Altroz 3,770 2,642 1,128 42.69 6.17
6 Safari 2,510 2,086 424 20.33 4.11
7 Curvv / EV 1,432 5,351 -3,919 -73.24 2.34
8 Tigor / EV 1,196 926 270 29.16 1.96
- Total 61,134 48,133 13,001 27.01 100.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பண்டிகை காலம் ஆகியவை வாடிக்கையாளர்களிடையே சாதகமான மனநிலையை உருவாக்கி உள்ளன. இதன் எதிரொலியாக தான் டாடா கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. டாடா நெக்ஸான், பன்ச், டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ் மற்றும் ஹாரியர் போன்ற கார் மாடல்கள் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளன. அதேசமயம், கர்வ் காரின் விற்பனை சரிந்துள்ளது. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட கர்வ் அறிமுகப்படுத்தப்பட்டதால், அதன் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2025, 22:39 [IST]
English summary
Tata motors cars wise sales report of october 2025 check all details here
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X