காரின் ஆன்ரோடு விலைக்கே 100சதவீத லோன்.. 6மாசத்துக்கு இலவசமா சார்ஜ் செஞ்சுக்கலாம்.. ஆடிக்குகூட இப்படி ஆஃபர் தரல

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மின்சார கார் (Electric Car) விற்பனையில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. கடந்த சில மாதங்களாக இந்த இடத்தை டாடா-விடம் இருந்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) தட்டி பறித்துக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே பொங்கி எழுந்த வீரனை போல சென்ற ஜனவரி மாதத்தில் அதிக விற்பனையின் வாயிலாக ஓங்கி கொட்டி எம்ஜி மோட்டாரை டாடா மோட்டார்ஸ் ஓரங்கட்டியது.

எம்ஜி நிறுவனத்தின் மின்சார கார்கள் 2025 ஜனவரியில் 4,237 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில் டாடா இ-கார்கள் 5,047 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இந்த மாதிரியான சிறப்பான விற்பனை வரவேற்பின் விளைவாக டாடா மோட்டார்ஸ் தற்போது 2 லட்சம் யூனிட்டு மின்சார கார்கள் விற்பனையை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tata motors hits 2 00 000 ev sales milestone

இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை ஒட்டி சில சிறப்பு திட்டங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்து உள்ளது. எக்ஸ்சேஞ்ச் போனஸ், 100 சதவீதம் ஆன்-ரோடு ரேட்டிற்கே வாகன கடன் ஆகியவற்றையே நிறுவனம் தற்போது அறிவித்திருக்கின்றது. இது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதுதவிர மிக முக்கியமான ஆஃபராக ஆறு மாதங்களுக்கு இலவச சார்ஜிங் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், டாடா பவர் சார்ஜிங் ஸ்டேஷன் வாயிலாக மட்டுமே இலவசமாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதுமட்டுமல்ல இலவசமாக 7.2 kW திறன் கொண்ட ஏசி வீட்டு சார்ஜிங் கருவியையும் பொருத்தி தர இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

Tata ev offer

புதிதாக டாடாவின் எலெக்ட்ரிக் காரை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகைக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், ஏற்கனவே டாடா எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தும் பழைய வாடிக்கையாளர்களைக் கவருகின்ற விதமான சில சிறப்பு திட்டங்களையும் நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே டாடாவின் மின்சார காரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் டாடாவின் புதிய நெக்ஸான் இவி மற்றும் கர்வ் இவி-க்கு அப்கிரேட் செய்ய திரும்பினால் அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை லாயல்டி வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ஆகையால், டாடாவின் மின்சார காரை பயன்படுத்துவோர்க்கு இந்த திட்டத்தின் வாயிலாக இரட்டிப்பான பலன் கிடைக்க இருக்கின்றது.

இதேபோல், டாடாவின் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்தி வரும் உரிமையாளர்களாலும் நெக்ஸான் இவி மற்றும் கர்வ் இவி-யை அப்கிரேட் செய்துக் கொள்ள முடியும். அதாவது, எக்ஸ்சேஞ்ச் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே லாயல்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே தற்போது பெட்ரோல், டீசல் டாடா கார்களைப் பயன்படுத்துவோரும் மின்சார கார் பயன்பாட்டிற்கு மாற இது ஓர் நல் வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் 1 செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி விண்ட்ஸர் இவி இருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தில் டாடாவின் நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி கார் மாடல்களே இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. டாடாவின் தற்போதைய புதிய ஆஃபரால் வரும் நாட்களில் மீண்டும் முன்னணி இடத்தை டாடாவின் இ-கார்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் ஆடி மாசத்துக்கு வழங்கியதைவிட அசத்தலான இந்த ஆஃபரை வழங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 21:04 [IST]
English summary
Tata motors celebrates sale of over 2 lakh electric vehicles in india with special offers
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+