டாடாவோட புது பிராண்டு அம்பாசிடர் யாரு தெரியுமா? இந்த தாடி வச்ச மனுஷன வச்சுதான் முன்னேற பிளான் போட்டு இருக்கா!

முன்னணி நிறுவனங்கள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்ள பிரபலமான மனிதர்களை பிராண்டு அம்பாசிடராக வைத்துக் கொள்வது வழக்கம். விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சார்ந்த உச்ச நட்சத்திரங்களையே அவர்கள் பிராண்டு அம்பாசிடராக வைத்திருக்கின்றார். அந்தவகையில், பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) தன்னுடைய பிராண்டிற்கான அம்பாசிடராக கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சினை நிர்ணயம் செய்திருக்கின்றது. இதேபோல், ஆடி (Audi) சொகுசு கார் நிறுவனம் விராட் கோலி-யை அம்பாசிடராக வைத்திருக்கின்றது.

இதுபோலவே, ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பிராண்டை பிரபலமாக வைத்திருக்க பிரபலங்களை பிராண்டு அம்பாசிடராக வைத்திருக்கின்றன. இந்த நிலையிலேயே நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ம் ஓர் பிரபலத்தை தன்னுடைய பிராண்டின் அம்பாசிடராக நிர்ணயம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tata s brand ambassador vicky kaushal

அது, பிரபல இந்தி பட நடிகரையே பிராண்டு அம்பாசிடராக நிர்ணயம் செய்து உள்ளது. விக்கி கௌசல், இவரையே பிராண்டு அம்பாசிடராக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கின்றது. சமீபத்தில் வெளியாகி சாவா மற்றும் உறி போன்ற முன்னணி படங்களில் இவர் நடித்திருக்கின்றார். இவரே, வரும் நாட்களில் டாடா
நிறுவனத்தின் பயணிகள் மற்றும் மின்சார வாகனங்களை விளம்பரப்படுத்த உள்ளார்.

இதுமட்டுமல்ல விரைவில் தொடங்க இருக்கும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய புதிய வரவான டாடா கர்வ் (Tata Curvv) மாடலை முன்னிலைப் படுத்தி விளம்பரப்படுத்தவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த போட்டியில் காரை பதம் பார்க்கின்ற மாதிரி பந்தை அடிப்பவர்களுக்கு கர்வ் பரிசாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த நாட்களில் இதுமாதிரியான நடவடிக்கைகளையே டாடா மோட்டார்ஸ் முன்னெடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேபோல், ஐபிஎல் மேட்ச்சின் போது அதிகம் அந்த குறிப்பிட்ட காரையே அது விளம்பரப்படுத்தவும் செய்தது. ஆகையால், வரவிருக்கும் ஐபிஎல்-இன்போது அதிகம் கர்வ் விளம்பரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த விளம்பரத்தில் காரை புரமோட் செய்யும் விதமாக விக்கி கௌசலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா கர்வ் இந்தியாவில் மின்சாரம் மற்றும் ஐசிஇ என இரு அவதாரங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐசிஇ-இல் பெட்ரோல் மற்றும் டீசல் இந்த இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. கர்வ் டீசல் ரூ. 11.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், கர்வ் பெட்ரோல் ரூ. 9.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த இரண்டைவிட சற்றே காஸ்ட்லியானதாக கர்வ் இவி உள்ளது. இதன் ஆரம்ப விலையே ரூ. 17.49 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே ஐபிஎல் போட்டியின் அதிகாரப்பூர்வமான வாகனமாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கின்றது.

Take a Poll

இதையே போட்டியில் பந்தால் அடித்து பதம்பார்க்க இருப்பவர்களுக்கு பரிசாக வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கர்வ் இவியை இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 45 kWh பேட்டரி பேக் மற்றும் 55 kWh பேட்டரி பேக் ஆகியவையே அவை ஆகும். இதில் 45 kWh பேட்டரி ஓர் முழு சார்ஜில் 502 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் தேர்வான 55 kWh ஓர் முழு சார்ஜில் 585 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தி திரைப்பட உலகின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக விக்கி கௌசல் அறியப்படுகின்றார். இவரை தன்னுடைய பிராண்டு அம்பாசிடராக டாடா மோட்டார்ஸ் நிர்ணயம் செய்திருப்பது, அந்த பிராண்டின் விற்பனை வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இவரை பிராண்டு அம்பாசிடராக நிர்ணயம் செய்திருப்பதால் சமீப காலமாக சந்தித்து வரும் ஏற்ற-இறக்கமான விற்பனையில் ஓர் சமநிலையை அது காணும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கின்றது என்பதை அறிய கொஞ்சம் பொருத்திருந்துதான் ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 9:22 [IST]
English summary
Tata motors chooses bollywood actor vicky kaushal as its brand ambassador
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X