ஒரே நாளில் 10,000 கார்கள் டெலிவரி! டாடாக்கு அடித்தது ஜாக்பாட்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்த முதல் நாளில் விலையை குறைந்ததது மட்டுமல்லாமல் பண்டிகை கால ஆஃபர்களை வழங்கியிருந்த நிலையில் ஒரே நாளில் இந்நிறுவனம் 10,000 கார்களை டெலிவரி செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஒரே நாளில் அதிக கார்களை டெலிவரி செய்த நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 கடந்த 22ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி வாகனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. முன்னர் இது 28 சதவீதம் மற்றும் கூடுதல் செஸ் வரி வேறு வசூலிக்கப்பட்டது. அதே நேரம் சொகுசு வாகனங்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சொகுசு செக்மெண்டிலும் சிறிய வாகன செக்மெண்டிலும் கணிசமான விலை குறைப்பு என்பது நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்களை நேரடியாக மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி ஜிஎஸ்டி குறையப்போவதாக அறிவித்தவுடன் அந்நிறுவனத்திற்கு 25,000 பேர் வாகனங்களை கேட்டு டீலர்ஷிப்களை அனுகியுள்ளனர். விலைகுறைவாக வந்ததன் காரணமாக அதிக மக்கள் காரை வாங்க முடிவு செய்தனர்.
இதற்கிடையில் ஜிஎஸ்டியில் விலைகுறைந்ததது போக பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டாஸ் நிறுவனம் தனியாக பண்டிகை கால தள்ளுபடிகளை வழங்கியது. இதனால் மேலும் விலை கணிசமாக குறைந்தது. இதனால் விலை கணிசமாக குறைந்தது. இதனால் டாடா நிறுவனத்தின் டியாகோ கார் ரூ75,000 மற்றும் டிகோர் ரூ1.04 லட்சம் என விலை குறைந்துள்ளது.

இதன்படி ஜிஎஸ்டி விலை குறைந்த முதல் நாளே 10,000 பேருக்கு டாடா நிறவனம் காரை டெலிவரி செய்ததாக அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி விலைகுறைப்புடன் சேர்ந்து பண்டிகை கால சலுகைகளையும் வழங்கியது. இதன் படி நெக்ஸான் காருக்கு கூடுதாலக ரூ45,000 சேர்த்து மொத்தம் சுமார் ரூ2 லட்சம் வரையிலும் தள்ளுபடி விலையில் இந்த கார் கிடைக்கிறது.
இதே போல ஹாரியர் காருக்கு மொத்தம் ரூ1.9 லட்சம் வரையிலும், சஃபாரி காருக்கு ரூ2 லட்சம் வரையிலும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. டியாகோ காருக்கு ரூ1.20 லட்சமும், அல்ட்ராஸ், பஞ்ச் கார்களுக்கு ரூ1.70 லட்சமும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த விலை குறைப்பை பயன்படுத்தி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விற்பனையை பெற முயற்சிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நாளில் 10,000 காரில் டெலிவரி என்பது மிகப்பெரிய விஷயம் தான். இரண்டாம் நாள் 3ம் நாள் என ஒரு வாரத்திற்கு அதிக எண்ணிக்கையில் டெலிவரி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் வழக்கத்தை விட அதிக கார்கள் விற்பனையாகி மார்கெட் பெரியதாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








