உலககோப்பையை ஜெயித்த சிங்க பெண்களுக்கு இப்படி ஒரு ரதம் பரிசா? நம்பவே முடியலயே
சமீபத்தில் நடந்த ஐசிசி பெண்களுக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் டாடா நிறுவனம் அந்த அணியில் உள்ள அத்தனை வீரர்களுக்கும் தனித்தனியாக ஒரு டாடா சியாரா காரை பரிசாக வழங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த ஐசிசி உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைபற்றியது. இதை கொண்டாடும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அந்த அணியில் உள்ள வீராங்கனைகளுக்கு டாடா சியாரா கார்களை பரிசளித்து அவர்களது வெற்றியை கொண்டாடியுள்ளது.

இந்தியாவில் பெண்கள் அணி உலககோப்பையை வெற்றது பெண்கள் கிரிக்கெட் அணிக்கானஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இவர்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தனது புதிய சியாரா காரை பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பரிசாக வழங்கியள்ளது.
இதில் குறிப்பிட்ட வேரியன்ட் என்று இல்லாமல் வீராங்கனைகள் விரும்பும் வேரியன்டை அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா சியாரா காரை பொருத்தவரை ரூ11.49 லட்சம் முதல் ரூ21.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காருக்கான புக்கிங் தான் தற்போது நடந்து வருகிறது. இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால் ரூ21,000 முன்பணம் செலுத்தி வாகனத்தை புக்கி்ங செய்ய முடியும். இந்த கார்களின் டெலிவரி வரும் 2026 ஜனவரி மாதம் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஸ்மார்ட் +, ப்யூர், ப்யூர்+, அட்வெஞ்சர், அட்வெஞ்சர் +, அக்களீஷ்டு, அக்கம்ளீஷ்டு+ ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.
இந்த கார் டாடா நிறுவனத்தின் அர்கோஸ் ஆர்கிடெக்ஷர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பழைய ஸ்டைல் இருந்தாலும் மார்டன் லுக் உள்ளது. முக்கியமாக ஷார்ப்பான எல்இடி ஹெட்லைட், முழு அகல எல்இடி லைட் பார், டுயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 106 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் டர்போ பெட்ரோல்இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இது 160 பிஎஸ் பவரையும் 255 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இது போக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 120 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் டுயல் கிளட்ச் ஆட்டோ அம்சமும் உள்ளது. இதில் 3 ஸ்கீரீன் டேஷ் போர்டு லேஅவுட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, தனித்துவமான பயணிகள் ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இப்படியான கார்களை பரிசளிப்பது நிச்சயம் வரவேற்க்கதக்கது தான். இது இளம் வீராங்கனைகளுக்கு ஒரு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. இதில் வேரியன்டை வீராங்கனைகளே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. நிச்சயம் பாராட்டதக்கது தான்.


Click it and Unblock the Notifications








