கார் வாங்க விரும்பும் மக்களின் ஆசையில் மண் அள்ளி போட்ட டாடா! இதுக்கு அப்புறம் ஷோரூமுக்கு கூட்டம் வருமா?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், கர்வ் (Curvv) ஆகும். டாடாவின் புதிய கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காராக கடந்த ஆண்டு இறுதியில் கர்வ் அறிமுகம் செய்யப்பட்டது. மார்க்கெட்டில் பிரபலமான மற்ற டாடா கார்களான நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch)-ஐ காட்டிலும் விலைமிக்கதாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், தற்போதுவரையில் கர்வ் காரின் விற்பனை நல்லப்படியாகவே உள்ளது. இந்த நிலையில், டாடா கர்வ் காரின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டாடா கர்வ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் விலை உயர்வு கொண்டுவரப்படவில்லை. குறிப்பிட்ட சில வேரியண்ட்களின் விலைகள் மட்டுமே 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ளன. கர்வ் காரில் ரூ.3,000இல் இருந்து ரூ.17,000 வரையில் விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் காரில் இரு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்பன அந்த இரு என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இதில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது இரு விதமான ட்யூன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஒரு ட்யூனில் 125 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலும், மற்றொரு ட்யூனில் அதனை காட்டிலும் சற்று குறைந்த இயக்க ஆற்றலும் இந்த டர்போ பெட்ரோல் என்ஜினில் இருந்து கிடைக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
டாடா கர்வ் காரில் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜினை மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். கர்வ் காரை ஸ்மார்ட், பியூர் பிளஸ், பியூர் பிளஸ் எஸ், கிரியேட்டீவ், கிரியேட்டீவ் எஸ், கிரியேட்டீவ் பிளஸ் எஸ், அக்கம்ப்ளீஷ்டு எஸ் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் ஏ என மொத்தம் 8 விதமான வேரியண்ட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முன்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.19.20 லட்சம் வரையில் இருந்த நிலையில், தற்போது விலை உயர்வின்படி கர்வ் காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.19.33 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, கர்வ் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டிருக்கும் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான ஸ்மார்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே உயர்த்தப்படவில்லை.
அதிகப்பட்சமாக, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் ரூ.17,000 உயர்த்தப்பட்டுள்ளன. டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் வேரியண்ட்களின் விலைகள் ரூ.13,000மும், அதேபோல் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் வேரியண்ட்கள் அனைத்தின் (ஸ்மார்ட் வேரியண்ட்டை தவிர்த்து) விலைகளும் ரூ.13,000மும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேநேரம், அதிகப்பட்சமாக 125 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வகையில் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறும் வேரியண்ட்களின் விலைகள் வெறும் ரூ.3,000 மட்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அதிகரித்துவரும் கார் உற்பத்தி செலவும், போக்குவரத்து செலவும் தான் இதற்கு காரணமாக இருக்கும்.
| 1.2L Turbo Petrol-Manual | |||
| Variant | Old Price | New Price | Difference |
| Smart | ₹9,99,990 | ₹9,99,990 | No Change |
| Pure Plus | ₹11,16,990 | ₹11,29,990 | ₹13,000 |
| Pue Plus S | ₹11,86,990 | ₹11,99,990 | ₹13,000 |
| Creative | ₹12,36,990 | ₹12,49,990 | ₹13,000 |
| Creative S | ₹12,,86,990 | ₹12,99,990 | ₹13,000 |
| Creative Plus S | ₹13,86,990 | ₹13,99,990 | ₹13,000 |
| Accomplished S | ₹14,86,990 | ₹14,99,990 | ₹13,000 |
| 1.2L Turbo Petrol-Automatic | |||
| Pure Plus | ₹12,49,990 | ₹12,66,990 | ₹17,000 |
| Pure Plus S | ₹13,19,990 | ₹13,36,990 | ₹17,000 |
| Creative | ₹13,69,990 | ₹13,86,990 | ₹17,000 |
| Creative S | ₹14,19,990 | ₹14,36,990 | ₹17,000 |
| Creative Plus S | ₹15,19,990 | ₹15,36,990 | ₹17,000 |
| Accomplished S | ₹16,19,990 | ₹16,36,990 | ₹17,000 |
| 1.2L Turbo Petrol-Manual (125PS) | |||
| Creative S | ₹14,16,990 | ₹14,19,990 | ₹3,000 |
| Creative Plus S | ₹15,16,990 | ₹15,19,990 | ₹3,000 |
| Accomplished S | ₹16,16,990 | ₹16,19,990 | ₹3,000 |
| Accomplished Plus A | ₹17,66,990 | ₹17,69,990 | ₹3,000 |
| 1.2L Turbo Petrol-Automatic (125PS) | |||
| Creative Plus S | ₹16,66,990 | ₹16,69,990 | ₹3,000 |
| Accomplished S | ₹17,66,990 | ₹17,69,990 | ₹3,000 |
| Accomplished Plus A | ₹19,16,990 | ₹19,19,990 | ₹3,000 |
| 1.5L Turbo Diesel-Manual | |||
| Smart | ₹11,49,990 | ₹11,49,990 | No change |
| Pure Plus | ₹12,66,990 | ₹12,79,990 | ₹13,000 |
| Pure Plus S | ₹13,36,990 | ₹13,49,990 | ₹13,000 |
| Creative | ₹13,86,990 | ₹13,99,990 | ₹13,000 |
| Creative S | ₹14,36,990 | ₹14,49,990 | ₹13,000 |
| Creative Plus S | ₹15,36,990 | ₹15,49,990 | ₹13,000 |
| Accomplished S | ₹16,36,990 | ₹16,49,990 | ₹13,000 |
| Accomplished Plus A | ₹17,69,990 | ₹17,82,990 | ₹13,000 |
| 1.5L Turbo Diesel-Automatic | |||
| Pure Plus | ₹14,16,990 | ₹14,29,990 | ₹13,000 |
| Pure Plus S | ₹14,86,990 | ₹14,99,990 | ₹13,000 |
| Creative S | ₹15,86,990 | ₹15,99,990 | ₹13,000 |
| Creative Plus S | ₹16,86,990 | ₹16,99,990 | ₹13,000 |
| Accomplished S | ₹17,86,990 | ₹17,99,990 | ₹13,000 |
| Accomplished Plus A | ₹19,19,990 | ₹19,32,990 | ₹13,000 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் இந்த விலை அதிகரிப்பால், கர்வ் காரின் விலைமிக்க வேரியண்ட்களின் விலைகள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர்த்து, எண்ட்ரீ-லெவல் ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலைகள் அதிகரிக்கப்படாதது சந்தோஷமான விஷயம் ஆகும். பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இரு விதமான என்ஜின்கள் உடனும் ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால், எப்படியாவது டாடா கர்வ் காரை குறைந்த விலையிலாவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.


Click it and Unblock the Notifications








