இதுக்கு அப்புறமாவது கஸ்டமர்ஸ் அதிகம் ஆகுவாங்களா? டாடாவின் புதிய வசதிகளை பார்த்து சொகுசு கார் கம்பெனிகளும் ஷாக்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு, புதிய மேம்படுத்தப்பட்ட எக்ஸிகியூட்டிவ் அம்சங்களுடன் கூடிய 'கர்வ்' (Curvv) கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பான பொறியியல் புதுமைகள் உடன், அனைத்து கர்வ் வேரியண்ட்களிலும் (ICE மற்றும் EV) உட்புற இடவசதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சவுகரியம் மற்றும் நடைமுறை பயன்பாட்டில் சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடியதாக டாடா கர்வ் மாறியுள்ளது.
இந்தியாவின் முதல் ஆர்-கம்ஃபர்ட் இருக்கைகள் (பாஸிவ் வென்டிலேஷன் உடன்), பின் இருக்கைகளில் செரினிட்டி ஸ்க்ரீன் சன்ஷேட்கள், பின் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட்டில் பிரத்யேகமான கப் ஹோல்டர்கள், வெள்ளை கார்பன் ஃபைபர் பூச்சுடன் கூடிய டேஷ்போர்டு இன்செர்ட், மற்றும் ப்ளஷ் பெனெகே-காலிகோ லெதரெட் இருக்கைகள் உடன் லலித்பூர் கிரே என்கிற வெண்மை நிறத்திலான உட்புற கேபின் போன்ற பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவை கர்வ் காரை காம்பாக்ட் எஸ்யூவி கார் பிரிவிலேயே சிறந்த ஆடம்பர அனுபவத்தை வழங்கும் காராக மாற்றியுள்ளன. இருப்பினும், ஆடம்பரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், கர்வ் காரில் ட்வின்-ஸோன் க்ளைமேட் ஏர் கண்டிஷனிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கர்வ்.இவி (Curvv.ev) எலெக்ட்ரிக் காரில் 'ப்யூர் கம்ஃபர்ட்' என்கிற பெயரில் பின் இருக்கை பயணிகள் கால் வைத்துக் கொள்வதற்கான சவுகரிய வசதி மற்றும் எர்கோவிங் ஹெட்ரெஸ்ட் வசதிகள் மூலம் சவுகரியம் மற்றும் தனித்துவத்தை மேலும் மேம்படுத்தி உள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட பின் இருக்கைகள் மற்றும் எக்ஸிகியூட்டிவ் அம்சங்கள் உடன், புதிய கர்வ் கார் 'அக்கம்பிளிஷ்ட்' (Accomplished) வேரியண்ட்டில் ரூ.14.55 லட்சம் ஆரம்ப விலையிலும், கர்வ்.இவி கார் 'அக்கம்பிளிஷ்ட்' மற்றும் 'எம்பவர்ட்' (Empowered) வேரியண்ட்டில் ரூ.18.49 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும். டாடா கர்வ், அதன் தனித்துவமான எஸ்யூவி-கூபே வடிவமைப்பு மற்றும் ஸ்டைல், புதுமை, நடைமுறை அம்சங்களின் சரியான கலவையுடன் இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார் பிரிவை மறுவரையறை செய்கிறது.

எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன்களுக்காக முறையே மேம்பட்ட ATLAS மற்றும் acti.ev கட்டமைப்புகளில் உருவாக்கப்படும் கர்வ், சிறந்த எரிபொருள் திறன் மற்றும் அதிக ரேஞ்சை வழங்குகிறது. இதன் கேபின் ஆடம்பரமான சவுகரியத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குரல் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய பெரிய பனோரமிக் சன்ரூஃப், மூட் லைட்டிங் மற்றும் சைகை மூலம் இயக்கப்படும் பவர்டு டெயில்கேட் மற்றும் 500 லிட்டர் கொள்ளளவில் பெரிய பூட் ஸ்பேஸ் போன்ற பல நடைமுறை அம்சங்கள் இதில் உள்ளன.
காருக்குள் டேஸ்போர்டில் முக்கிய தொழில்நுட்ப அம்சமாக, ஹர்மன் நிறுவனத்தின் 31.24 செ.மீ (12.3") சினிமாட்டிக் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது 9 ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் Arcade.ev உடன் இணைந்து சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. எரிபொருள் என்ஜின் கொண்ட டாடா கார் ஆனது 1.2 லிட்டர் ஹைபீரியன் பெட்ரோல் டைரக்ட் இன்ஜெக்ஷன், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் க்ரையோஜெட் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இவை, ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கின்றன. மறுப்பக்கம், கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் ஆனது 45kWh மற்றும் 55kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 45kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 430கிமீ தொலைவிற்கும், 55kWh பேட்டரியில் 502கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பொதுவாகவே பாதுகாப்பு விஷயத்தில் சிறந்தவை என்பது நம் எல்லாருக்குமே தெரியும். அந்த வகையில், கர்வ் கார்களும் லெவல்-2 ADAS அம்சத்துடன் வருகின்றன. மேலும், இது 5-நட்சத்திர பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது கர்வ் கார்களின் சிறந்த பொறியியல் மற்றும் உச்சபட்ச பாதுகாப்பு தரங்களுக்கான ஒரு சான்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு சில காரணங்கள் உள்ளன. இருப்பினும், கர்வ் கார்களை அவ்வப்போது மறக்காமல் அப்டேட் செய்துவிடும் டாடா நிறுவனம், இந்த முறையும் கவர்ச்சிக்கரமான அம்சங்களுடன் கர்வ் கார்களை நோக்கி கஸ்டமர்களை இழுக்க முயற்சித்துள்ளது.


Click it and Unblock the Notifications









