ரூ.7 லட்சத்திற்குள் கார் விலையை நிர்ணயிக்க பெரிய மனசு வேணும்! டாடாவில் எல்லாரும் இந்த காரை தான் வாங்க போறாங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அல்ட்ராஸ் (Altroz) கார் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை பெற்றுள்ளது. மக்களை கவரும் வகையில் புதுமையான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.6.89 லட்சத்தில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. புதிய தோற்றம், அப்கிரேடான உட்புற கேபின் மற்றும் கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாடா காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது. அந்த அளவிற்கு மாதந்தோறும் ஏறக்குறைய 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் டாடா நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள கார்களுள் ஒன்று, அல்ட்ராஸ் ஆகும்.

Tata Motors Launched Altroz Facelift

டாடா மோட்டார்ஸின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான அல்ட்ராஸ் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) என்கிற பிரபலமான காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டாலும், அல்ட்ராஸ் கார்களின் விற்பனையும் சிறப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

இருப்பினும், கடந்த சில மாதங்களாக அல்ட்ராஸ் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை அடுத்து, அல்ட்ராஸ் காரை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன்படி தற்போது அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட், பியூர், கிரியேட்டீவ் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு எஸ் என நான்கு விதமான வேரியண்ட்களில் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

Tata Motors Launched Altroz Facelift

1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்கலாம். இதில் டீசல் என்ஜின் பியூர் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு எஸ் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். வேரியண்ட்டையும், என்ஜினையும் பொறுத்து காரின் விலைகள் வேறுப்படலாம். மேலே குறிப்பிடப்பட்ட ரூ.6.89 லட்சம் என்பது அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலையாகும்.

அதிகப்பட்சமாக ரூ.11.29 லட்சம் வரையில் இந்த காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, சிஎன்ஜி ஆப்ஷனிலும் புதிய அல்ட்ராஸ் கார் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்களிலும் சிஎன்ஜி ஆப்ஷனை பெறலாம். அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.89 லட்சத்தில் இருந்து ரூ.11.09 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

தோற்றத்தை பொறுத்தவரையில், அப்டேட் செய்யப்பட்ட டாடா அல்ட்ராஸ் கார் புத்துணர்ச்சியான வெளிப்புறத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, காரின் முன்பக்கமும், பின்பக்கமும் மெருக்கேற்றப்பட்டு உள்ளன. கண்கள் போன்றதான டிசைனில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் வழங்கப்பட்டு இருக்க, அதற்கு கீழே எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராஸ் கார்களின் விற்பனை சமீப காலத்தில் கணிசமாக குறைந்து வருவதை அடுத்து கொண்டுவரப்பட்டுள்ள புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், அல்ட்ராஸின் ஆயுட்காலத்தை மார்க்கெட்டில் இன்னும் சில வருடங்களுக்கு நீட்டிக்கும். ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் தற்போது வழங்கப்பட்டு உள்ளதால், அல்ட்ராஸின் அடுத்த தலைமுறை வெர்சன் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில வருடங்கள் நிச்சயமாக ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 22, 2025, 15:03 [IST]
English summary
Tata motors launched altroz facelift in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+