7 பேர் பயணிக்க கூடிய காரை வேற லெவலுக்கு கொண்டுவந்த டாடா! எல்லாத்தையும் பார்த்த பின் வாங்க முடிவு பண்ணுவீங்க!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) கார்கள் விலையுயர்ந்த கார்களாக விளங்குகின்றன. இருப்பினும், இவற்றையும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான பேர் வாங்குவதால், இந்த கார்களில் அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன்களை (Special Editions) அறிமுகம் செய்வதை டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாக கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது, டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் புதிய 'அட்வென்ச்சர் எக்ஸ்' (Adventure X) வேரியண்ட்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹாரியர் காரில் அட்வென்ச்சர் எக்ஸ் மற்றும் அட்வென்ச்சர் எக்ஸ் பிளஸ் என இரு விதமான வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

tata harrier and safari adventure x

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.18.99 லட்சம் மற்றும் ரூ.19.34 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், சஃபாரி காரில் அட்வென்ச்சர் எக்ஸ் பிளஸ் வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விலையுயர்ந்த டாடா கார்களாக விளங்கும் ஹாரியர் மற்றும் சஃபாரியின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் வழங்கப்படும் வசதிகளை குறைந்த விலையில் வாங்குவோரும் பெறும் விதமாக இந்த புதிய அட்வென்ச்சர் எக்ஸ் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், புதிய அட்வென்ச்சர் எக்ஸ் வேரியண்ட்டின் அறிமுகத்துடன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் சில வேரியண்ட்களின் விற்பனையையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது.

இவ்வாறு புதிய சேர்ப்பு/ நீக்கம் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட பின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் விலைகள் எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்கிற விபரங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போதைக்கு ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox) வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்களின் விலைகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன. இதன்படி, ஹாரியர் மேனுவல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.24.44 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதேபோல், சஃபாரி மேனுவல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15.50 லட்சத்தில் இருந்து ரூ.25.19 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டாடா ஹாரியர் ஆனது 5 இருக்கைகளை கொண்ட கார் ஆகும். அதுவே, சஃபாரியை 6-சீட்டர் அல்லது 7-சீட்டர் ஆப்ஷனில் வாங்கலாம். ஹாரியரை காட்டிலும் அதிக இருக்கை வசதிகள் உடன் அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றதாக இருப்பதினாலேயே விலை சற்று அதிகமாக இருப்பினும், ஹாரியரை காட்டிலும் சஃபாரி கார்களை அதிக பேர் வாங்குகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகவே பெரியதாக எந்தவொரு ஏற்ற, இறக்கமும் இன்றி சீராக உள்ளது. இதற்கு காரணம், இவ்வாறு அவ்வப்போது புதியது, புதியதாக ஸ்பெஷல் எடிசன்களை இந்த கார்களில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்வது ஆகும். இதன் மூலமாக, இந்த எஸ்யூவி கார்களை எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க டாடா மோட்டார்ஸ் முயற்சிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 6, 2025, 11:23 [IST]
English summary
Tata motors launches harrier and safari adventure x variants check price features all details here
மேலும்... #tata motors #suv car #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+