ராவண மண்ணில் கால் பதித்த டாடா! 7 காரை அங்கேயும் கொண்டு போயிட்டாங்க!
டாடா மோட்டார்ஸ், இலங்கையில் அதன் வாகனங்களை விற்பனைகாக அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் எரிபொருள் எஞ்சின் (ICE) மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (EVs) இரண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தம் 7 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகம், இலங்கை முழுவதும் பிரபலமான ஒரு வாகன விநியோகஸ்தரான DIMO உடன் இணைந்து விற்பனை செய்கிறது. இந்த வரிசையில் கார்கள் மற்றும் SUV கள் உள்ளன, இது டாடா இலங்கை மார்கெட்டில் பொருளாதார நெருக்கடிக்கிடையில் களம் இறங்குகிறது
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல்துறை கணிசமான கஷ்டங்களை எதிர்கொண்டது. இருப்பினும், தற்போது இலங்கை மீண்டு வருவதால், டாடா மோட்டார்ஸ் இந்த மார்கெட்க்கு மீண்டும் நுழைந்த முதல் கார் உற்பத்தியாளராக மாறியுள்ளது. இந்த நடவடிக்கை, எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் பெட்ரோல் இறக்குமதியைக் குறைத்து நிலைத்தன்மையை ஊக்குவிக்க இலங்கை அரசின் திட்டத்திற்கு தகுந்தார் போல் உள்ளது.

DIMO உடன் கூட்டுறவு மூலம், டாடா மோட்டார்ஸ் இலங்கைக்கு பல்வேறு வகையான வாகனங்களை அறிமுகப்படுத்தியது. ICE பிரிவில் பஞ்ச், நெக்ஸான் மற்றும் கர்வ் போன்ற மாடல்கள் உள்ளன. EV பிரிவில், டியாகோ EV, பஞ்ச் EV, நெக்ஸான் EV மற்றும் கர்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சி தெற்காசியாவில் அதன் இருப்பை வலுப்படுத்துவதற்கான டாடாவின் திட்டத்தை பிரதிபலிக்கிறது.
டியாகோ EV இலங்கைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவமாக காராக இருக்கிறது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற தெற்காசியாவின் பிற நாடுகளில் இந்த கார் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவில், இது டாடாவின் மிகவும் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனமாகும். தற்போது, டாடா மோட்டார்ஸ், ஆசிய துணைக்கண்டத்தில் சுமார் 70% மார்கெட் பங்கை வைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் இலங்கையில் பஞ்ச், நெக்ஸான் மற்றும் கர்வ் போன்ற ICE வாகனங்களுக்கு மூன்று வருடங்கள் அல்லது 1 இலட்சம் கிலோமீட்டர் (எது முதலில் வருகிறதோ அது) வாரண்டியை வழங்குகிறது. டியாகோ EV, பஞ்ச் EV, நெக்ஸான் EV மற்றும் கர்வ் EV போன்ற எலெக்ட்ரிக் மாடல்களுக்கு, 8 ஆண்டுகள் அல்லது 1.65 இலட்சம் கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
DIMO இந்த வாகன அணிவகுப்பில் அனைத்து வாகனங்களுக்கும் 24 மணி நேர ரோடு சைடு அசிஸ்ட் (RSA) மற்றும் தொழிற்நுட்ப சப்போர்ட்டை வழங்குவதன் மூலம் நிறைவு செய்கிறது. இந்த விரிவான சப்போர்ட் தொகுப்பு வாடிக்கையாளர் திருப்தியையும் டாடா தயாரிப்புகளில் நம்பிக்கையையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு இலங்கை அருகாமை, போக்குவரத்து செலவுகள் குறைவதால், டாடா மோட்டார்ஸுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வது பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக ஆக்குகிறது. இந்த புவியியல் பலர், அருகில் உள்ள நாடுகளில் அதன் கால்தடம் விரிவடைவதால் டாடாவுக்கு விற்பனை அளவு அதிகரிப்பை பெற வழி வகுக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அறிமுகம், டாடாவின் சர்வதேச வணிகம் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. இது எலெக்ட்ரிக் வாகனத்தின் தீர்வுகள் மூலம் நிலையான வாகன விற்பனையை ஆதரிக்கும் அதே வேளையில் அதன் விற்பனையை விரிவுபடுத்துவதற்கான அந்நிறுவனம் பல்வேறு திட்டங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications









