டாடா கார்கள் இதுக்கு அப்புறம் ஆவது புக் செய்த உடனே டெலிவிரி கிடைக்குமா? இந்த கலர்களில் இனி கார் கிடைக்காது!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் பண்டிகைக் காலங்களில் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், டாடா நிறுவனம் புதிய சியரா (Sierra) உள்ளிட்ட பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கிடையில் தற்போது எந்தவொரு அறிவிப்பும் இன்றி அதன் குறிப்பிட்ட கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களின் விற்பனையை டாடா நிறுத்தியுள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம்.

டாடா பன்ச் (Tata Punch): மைக்ரோ-எஸ்யூவி ரக காரான இதுதான் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இரண்டாவது அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது. பெட்ரோல் என்ஜின், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த அளவில் சிறியதான டாடா எஸ்யூவி கார் ப்யூர், அட்வென்ச்சர், அக்கம்பிளிஷ்ட் மற்றும் கிரியேட்டிவ் ஆகிய நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

tata motors made a variant rejig

டாடா நிறுவனத்தின் தற்போதைய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பன்ச் காரின் அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர் எஸ் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பன்ச் அட்வென்ச்சர் வேரியண்ட்டில் 3.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்டீயரிங் சக்கரத்தில் கன்ட்ரோல்கள் போன்ற அம்சங்களும், பன்ச் அட்வென்ச்சர் எஸ் வேரியண்ட்டில், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டெனா, சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை உணர் சென்சார்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): நெக்ஸான் ஆனது டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு ஆகும். இது டாடாவின் மொத்த கார்கள் விற்பனையில் 30%-க்கும் மேல் பங்களிக்கிறது. மேலும், இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யூவிகளில் ஒன்றாகும். சமீபத்தில் நெக்ஸான் ADAS அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டது, இது அதன் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

tata motors made a variant rejig

சமீபத்திய மேம்பாட்டில், டாடா நிறுவனம் நெக்ஸானில் இருந்து சிவப்பு கலர் ஆப்ஷனை நிறுத்தியுள்ளது. இது, அந்த நிறத் தேர்வுக்கு கிடைத்துவந்த குறைந்த தேவை காரணமாக இருக்கலாம். தெருக்களில் சிவப்பு நெக்ஸானைக் கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதும் உண்மையே. நெக்ஸானின் பிற கலர் ஆப்ஷன் ஆப்ஷன்களும், வேரியண்ட்களும் முன்பைப் போலவே கிடைக்கும்.

டாடா டியாகோ என்ஆர்ஜி (Tata Tiago NRG): டியாகோ என்ஆர்ஜி ஆனது ஸ்டாண்டர்ட் டியாகோ ஹேட்ச்பேக் காரின் மிகவும் வலிமையான, கிராஸ்-ஹேட்ச் பதிப்பாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த காரில் வழங்கப்பட்டுவந்த கிராஸ்லேண்ட் பழுப்பு கலர் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கமான போலார் வெள்ளை, சூப்பர்நோவா காப்பர் மற்றும் டேடோனா கிரே/ க்ளவுட் கிரே கலர் ஆப்ஷன்களில் வழக்கம்போல் டியாகோ என்ஆர்ஜி கார் கிடைக்கும்.

tata motors made a variant rejig

டியாகோ என்ஆர்ஜி காரில் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட புல்-பார்-ஸ்டைல் பம்பர், உறுதியான ஸ்கிட் பிளேட், ஒருங்கிணைந்த ரூஃப் ரெயில்களுடன் இன்ஃபினிட்டி பிளாக் ரூஃப், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டெனா, சாடின் ஸ்கிட் பிளேட்டுடன் மஸ்குலர் டெயில்கேட் ஃபினிஷ் மற்றும் அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. டியாகோ என்ஆர்ஜி காரில் மட்டுமின்றி, ஸ்டாண்டர்ட் டியாகோ காரிலும் அரிசோனா நீல நிற ஆப்ஷன் நீக்கப்பட்டு உள்ளது.

டியாகோ காருக்கான பிற கலர் ஆப்ஷன்களில் சூப்பர்நோவா காப்பர், ஓசன் ப்ளூ, ப்ரிஸ்டின் வைட், டோர்னாடோ ப்ளூ மற்றும் டேடோனா கிரே ஆகியவை அடங்கும். செயல்திறனைப் பொறுத்தவரை, டியாகோ என்ஆர்ஜி மற்றும் ஸ்டாண்டர்ட் டியாகோ இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு மாடல்களும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளன.

tata motors made a variant rejig

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, டாடா காரை புக் செய்து டெலிவிரிக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மிகவும் குறைவான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்ட் மற்றும் நிறத்தில் கார்களை உருவாக்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம் அல்லவா...

More from DriveSpark

Article Published On: Saturday, November 8, 2025, 21:42 [IST]
English summary
Tata motors made a variant rejig on punch nexon and tiago nrg cars check all details here
மேலும்... #tata motors #tata nexon #tiago #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X