சீனாவின் மறைமுக ஆதிக்கம்! எலக்ட்ரிக் கார்களை விற்பதில் டாடா நிறுவனம் தடுமாற இதுதான் காரணமா?
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முதலிடத்தில் கோலோச்சி கொண்டிருந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக சில வெளிநாட்டு கார் நிறுவனங்கள் வந்துவிட்டன. அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த கார் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் உடன் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் கடந்த 5 வருடங்களாக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யக்கூடிய அனுபவம் வாய்ந்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இதனாலேயே நம் நாட்டில் எலக்ட்ரிக் கார்களை வாங்க நினைக்கும் கஸ்டமர்களின் தேர்வு டாடா எலக்ட்ரிக் கார்களாக உள்ளன. அதன்படி, டாடாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 2025 ஜனவரி மாதத்திலும் 5 ஆயிரத்து 47 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் இதே ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 802 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 13.01%, அதாவது 755 கார்கள் குறைந்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரி மாதத்தில் சரியாக ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 4 ஆயிரத்து 47 டாடா எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து 2வது இடத்தில் எம்ஜி மோட்டார் உள்ளது.

இந்த லிஸ்ட்டில், டாடாவுக்கு அடுத்து 2வது இடத்தை எம்ஜி பிடிப்பதுதான் வழக்கம். ஆனால், கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் நெருக்கமாக நெருங்கி உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் எம்ஜி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 237 ஆகும்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் வெறும் ஆயிரத்து 203 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி விற்பனை செய்திருந்தது. இதில் இருந்து கடந்த 1 வருடத்தில் எம்ஜி எலக்ட்ரிக் கார்களின் விற்பனை இந்தியாவில் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அறியலாம். கடந்த ஆண்டு டிசம்பரில் 3 ஆயிரத்து 643 எம்ஜி எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தில் மஹிந்திரா 688 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் உள்ளது. 4வது மற்றும் 5வது இடங்களில் ஹூண்டாய் மற்றும் பிஒய்டி நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 321 மற்றும் 313 ஆகும். 269 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் சிட்ரோன் 6வது இடத்திலும், 181 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் பிஎம்டபிள்யூ 7வது இடத்திலும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், மெர்சிடிஸ், கியா, வால்வோ, ஆடி உள்ளிட்ட கார் நிறுவனங்களில் இருந்தும் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லிஸ்ட்டில் தற்போதைக்குக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது என்றாலும், அதனை முந்தி பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் முதலிடத்தை பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications









