மைலேஜ் சும்மா தாறுமாற தரப்போகுது! மரண சம்பவத்தை பிளான் போடும்
டாடா மோட்டார் நிறுவனம் தனது பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு புதிய இன்ஜின் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பொதுவாக பிரிமியம் கார்களில் பயன்படுத்தப்படாத சிஎன்ஜி வேரியன்டை கொண்டு வரடுவும் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு பக்கம் பிரபலமாகி வரும் நிலையில் மறுபக்கம் இது போன்ற முயற்சியை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் இந்தியாவில் 4 மீட்டருக்க குறைவான நீம் கொண்ட டியாகோ, டிகோர், பஞ்ச், நெக்ஸான் போன்றகார்களில் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு வந்து வதிற்பனை செய்து வரகிறது. சமீப காலமாக சிஎன்ஜி கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்த வருகிறது. கடந்த 2022ம் நிதியாண்டில் 3 சதவீதமாக இருந்த மார்கெட் பங்கு 2023ம் ஆண்டு 8 சதவீதமாக உயர்ந்தது. 2024ம் ஆண்டு 16 சதவீதமான உயர்ந்தது. இதுவே நடப்பு நிதியாண்டில் தற்போது 21 சதவீதமாக இது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை உணர்ந்த டாடா நிறுவனம் தனது பெரிய மாடல் கார்களிலும் சிஎன்ியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முக்கியமாக தனது கர்வ் மற்றும் சியாரா ஆகிய கார்களி்ல சிஎன்ஜி கார்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர் ஐசிஎன்ஜி மற்றும் சியாரா ஐசிஎன்ஜி ஆகிய கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனம் ஏற்கனவே விக்டோரிஸ் காரிலும், கிராண்ட் விட்டாரா காரிலும் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தியள்ளது. இந்நிலையில் அதற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால் தனது பிரிமியம் ரக கார்களில் சிஎன்ஜியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் பெரிய ரக எஸ்யூவி கார்களிலும் புதிய இன்ஜின் ஆப்ஷனாக ஹைபிரிட் ஆப்ஷனை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அதன்படி அந்நிறுவனத்தின் ஹாரியர் மற்றம் சஃபாரி கார்களில் ஹைபிரிட் ஆப்ஷன் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த தொழிற்நுட்பம் ஏற்கனவே இந்நிறுவனத்திடம் இருப்பதாக தெரிவித்துளு்ளது. சியாரா காரிலேயே இந்த ஹைபிரிட் ஆப்ஷன் அறிமுகமாக கூட வாய்ப்புள்ளுது. ரெனால்ட், நிஸான், ஹூண்டாய், கியா, ஹோண்டா போன்ற கார்களில் ஹைபிரிட் ஆப்ஷவனை கொண்டு வர ஏற்கனவே திட்டங்கள் போடப்பட்டு வருகின்றன.
டாடா நிறுவனம் தவனது 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில் ஹைபிரிட் ஆப்ஷன் இடம் பெற வாய்ப்புள்ளுது. இது நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களுடன் வரும் 25ம் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஹைபிரிட் ஆப்ஷன் பின்னர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளுது. இதற்கிடையி்ல டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகப்படுத்துகிறது.

டாடா நிறுவனம் தனது கார்களில் சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் ஆப்ஷனை கொண்டு வர மற்றொரு முக்கியமான காரணம் மைலேஜ் தான் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யும் வாகனங்களின் சராசரி மைலேஜ் எவ்வளவு இருக்க வேண்டும் என் விதிமுறையை அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கிடையி்ல மக்கள் மத்தியில் இந்த தொழிற்நுட்பம் அதிகமாக வரவேற்பு பெறுவதால் இந்த தொழிற்நுட்பத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது சியாரா காரை கொண்டு வரும் நேரத்தில் பிரிமியம் ரக கார்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.இதனால் நீண்ட நாட்கள் மக்கள் எதிர்பார்த்த ஆப்ஷன்கள் விரைவில் வரப்போகிறது. அதிக மைலேஜ் தரும் பெரிய கார்களை விரைவில் டாடாவில் காணலாம்.


Click it and Unblock the Notifications









