டாடாவின் அடுத்த மிக பெரிய அறிமுகம் இந்த கார்தான்.. இந்த காரால எல்லாமே தலைகீழா மாற போகுது! கொண்டாட தயாரா இருங்க
கடந்த சில மாதங்கள் முன்னர் வரை எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருந்தது, டாடா மோட்டார்ஸ். இதற்கு வேட்டு வைக்கும் விதமாக ஒரு சிறிய அறிவிப்பை வெளியிட்டது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்த சிறிய அறிவிப்பாலேயே டாடா தன்னுடைய நம்பர் 1 மின்சார கார் நிறுவனம் என்கிற இடத்தை அதனிடம் இழக்க நேரிட்டது. 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' எனும் திட்டத்தையே அது இந்தியாவில் அறிவித்தது.
இந்த திட்டத்தின்கீழ் எலெக்ட்ரிக் காரை வாங்கும்போது எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரிக்கான தொகையை செலுத்த வேண்டியதில்லை, அதற்கு, கிலோ மீட்டர் பயன்பாட்டிற்கு ஏற்ப நிறுவனத்திற்கு பணம் செலுத்தினால் போதும். இந்த திட்டத்திலேயே தன்னுடைய விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காரையும் அது விற்பனைக்கு வழங்கியது.

இவற்றாலேயே டாடா அலங்கரித்துக் கொண்டிருந்த நம்பர் 1 மின்சார கார் உற்பத்தியாளர் என்கிற அந்தஸ்த்தை அதனால் தட்டி பறிக்க முடிந்திருக்கின்றது. இந்த இடத்தை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சியிலேயே தற்போது டாடா மோட்டார்ஸ் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் முன்னணி கார் மாடல் ஒன்றின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது நிறுவனத்தின் மிக முக்கியமான மற்றும் மிகப் பெரிய அறிமுகமாக அமையும் என்று கூறப்படுகின்றது. ஹாரியர் கார் மாடலின் மின்சார வெர்ஷனையே இன்னும் ஒரு சில வாரங்கள் அல்ல மாத இடைவெளிக்குள் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தைக்காக மிகவும் அழகாக இந்த காரை டாடா தயார் செய்திருக்கின்றது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் கூட இந்த காரா டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போதே பலரின் கவனத்தை அந்த கார் கவர்ந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே விரைவில் அது விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் டி8 பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த காரை இந்தியாவிற்கா டாடா தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே லுக்கில் மட்டுமல்ல பயணத்திலும் அது இந்தியர்களின் மனதைக் கவரக் கூடியதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
குறிப்பாக, ஹாரியர் ஐசிஇ வெர்ஷனில் இருந்து இது பலநிலைகளில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையிலேயே டாடா தயார் செய்திருக்கின்றது. பிரீமியம் மற்றும் சிறப்பம்சங்களையும் இந்த காரில் அது மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல இன்ஃபோடெயின் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடனும், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
இவை மட்டுமல்ல, பனோரமிக் சன்ரூஃப் நிற மாறும் லைட் வசதியுடனும், ஸ்டயரிங் வீலில் பிரதிபலிக்கும் டாடா சின்னம், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, மின்சாரத்தின் வாயிலாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இந்த கார் பணக்காரர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரீமியம் அம்சங்கள் அதிகமாக இடம் பெற்றிருப்பதால் இந்த கார் பணக்கார்களுக்கானதாக இருக்குமோ என நினைத்துவிட வேண்டாம். நடுநிலை வசதி படைத்தவர்களாலும் வாங்கக் கூடிய விலையிலேயே இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் கார் பற்றிய முழு விபரங்களையும் அறிவிக்கவில்லை.
அதேவேளையில், இந்த காரில 500 கிமீ ரேஞ்சை வழங்கக் கூடிய 75 kWh திறன் பேட்டரி பேக்கையே வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேட்டரி பேக்கில் இருந்து வீட்டு உபயோக பொருட்களுக்கான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் வசதியையும் டாடா வழங்க இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே இந்த காரின் வருகை மார்க்கெட்டின் இப்போதைய தலைகீழாக மாற்றி நிறுவனம் முன்னதாக அலங்கரித்து வந்த முன்னணி இடத்தை மீட்டு தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்ததுபோன்று இன்னும் பல வசதிகளை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும் என ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் இந்த காருக்கான எதிர்பார்ப்பு இப்போதே உச்சத்தில் இருக்கின்றது. இதேபோல், விற்பனையிலும் இந்த கார் டாடாவின் மற்ற இ-கார்களை போல சாதனைப் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








