டாடா- மாருதி போட்டி இனிமே தான் சூடுப்பிடிக்க போகுது! மே 22 வரை வெயிட் பண்ணா போதும்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து விரைவில் அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனாக புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய காரை வருகிற மே 22ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸின் சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக அல்ட்ராஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் பிரபலமான மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காருக்கு போட்டியாக டாடா அல்ட்ராஸ் விற்பனை செய்யப்படுகிறது.

tata motors released teaser video

பலேனோ அளவிற்கு இல்லையென்றாலும், அல்ட்ராஸ் கார்களின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பானதாக இருந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அல்ட்ராஸ் கார்கள் டாடா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் வெறும் ஆயிரத்து 658 அல்ட்ராஸ் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 5 ஆயிரத்து 985 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவ்வாறு அல்ட்ராஸ் கார்கள் விற்பனை படிப்படியாக குறைந்துக் கொண்டே வருவதை டாடா மோட்டார்ஸ் உணர்ந்ததை அடுத்து, அல்ட்ராஸ் காரை அப்கிரேட் செய்ய உள்ளது. இந்த வகையில்தான், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், காரின் முன் & பின்பக்கத்தில் தான் அதிக அளவிலான அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

tata motors released teaser video

அதேபோல், அல்ட்ராஸ் காருக்கு உள்ளேயும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதை வெளிக்காட்டும் வகையில் தற்போது யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோ அமைந்துள்ளது. புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் முழுவதுமாக எல்இடி தரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஹெட்லைட்களுக்கு மேலே கண் புருவம் போன்றதான டிசைனில் எல்இடி டி.ஆர்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் காணலாம்.

ஃபாக் விளக்குகளுக்கு ஏற்ப காரின் முன்பக்க பம்பரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளதுபோல் இந்த வீடியோவில் தெரிகிறது. அதேபோல், காரின் முன்பக்கத்தில் கிரில் பகுதியின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. புதிய அல்ட்ராஸ் காருக்கு பின்பக்கத்தில், புதிய எல்இடி டெயில்லைட்கள் இரண்டையும் எல்இடி லைட் பார் ஒன்று இணைக்கிறது. பின்பக்க பம்பர் ட்யூயல்-டோன் ஃபினிஷிங்கில் முன்பை காட்டிலும் ஸ்போர்டியரான டிசைனில் உள்ளது.

கதவு கைப்பிடிகள் பறித்து இழுக்கக்கூடியவைகளாகவும், ஒளிரக்கூடியவைகளாகவும் உள்ளன. அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. இந்த டிசைனை பார்க்கும்போது, எலக்ட்ரிக் கார்களில் (Electric Cars) கொடுக்கப்படும் அலாய் சக்கரங்களை போன்று உள்ளது. இதற்கேற்ப, புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு புதிய நிறங்களில் பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற தோற்றத்தை டீசர் வீடியோவில் டாடா நிறுவனம் வெளிக்காட்டவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், மென்மையான மெட்டீரியல்கள் உடன் புதிய டிசைனில் டேஸ்போர்டு, 10.25-இன்ச்சில் பெரிய அளவில் டச் ஸ்க்ரீன் இண்டோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய டிசைனில் டிரைவருக்கான தகவல்களை வழங்கக்கூடிய புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10.25-இன்ச் இண்டோடெயின்மெண்ட் திரை ஆனது டாடா அல்ட்ராஸ் காரில் ஏற்கனவே சில வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வருகிறது. புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் இதனை மேலும் பல வேரியண்ட்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலின் அறிமுகத்திற்கு பிறகாவது டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 6, 2025, 5:00 [IST]
English summary
Tata motors released teaser video of new altroz facelift car
மேலும்... #tata motors #tata altroz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+