ரூ10 லட்சத்திற்கும் கம்மியான விலையில் வரப்போகும் 3 டாடா கார்கள்! இப்பவே ரெடியாகுங்க!
இந்தியாவின் மோட்டார் வாகனத் துறையில் முக்கியமான பெயரான டாடா மோட்டார்ஸ், அதன் மலிவு விலை கார்களின் வரிசையை புதுப்பிக்கத் தயாராக உள்ளது. 2025ம் ஆண்டில் 6-11 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலைப்பட்டியலில் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது. இந்த நடவடிக்கை, டாடா நிறுவனம் பிரீமியம் வாகனங்களில் சமீபத்தில் கவனம் செலுத்தியதைத் தொடர்ந்து, என்ட்ரி லெவல் கார் பிரிவில் டாடாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக கொண்டு வரப்படுகிறது.
இந்திய வாடிக்கையாளர்களிடையே பிரபலமான தேர்வான டாடா பஞ்ச் கார் உள்ளது, இந்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட உள்ளது. புதுப்பிக்கப்பட்ட மைக்ரோ-SUV டாடா பஞ்ச். இ.வி.யிலிருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு கூறுகளை இதில் பொருத்தலாம். ஷார்பான எல்இடி டிஆர்எல்எஸ், வெல்கம் அனிமேஷன் மற்றும் செங்குத்தாக அமைக்கப்பட்ட எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஆகியவை அதன் நேர்த்தியான தோற்றத்திற்காகவே. மறுவடிவமைக்கப்பட்ட அப்பர் கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கீழ் கிரில் வடிவம் ஆகியவை அதன் ஆக்ரோஷமான அணுகுமுறையை மேம்படுத்தும்.

உள்ளே, பஞ்ச் மறுவடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு, புதிய அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் புதுப்பிக்கப்பட்ட கலர் ஸ்கீம்களை கொண்டிருக்கலாம். தொழில்நுட்ப ஆர்வலர்களை ஈர்க்க, டாடா மோட்டார்ஸ் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ சப்போர்ட் உடன் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தலாம். 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜின்கள், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் ஆகியவை மாறாமல் இருக்க வாய்ப்புள்ளது.
டாடா டயாகோ, மார்க்கெட்டில் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள, இந்த ஆண்டு அதன் இரண்டாவது ஃபேஸ்லிஃப்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செலவை கட்டுப்படுத்துவதற்காக ஷீட் மெட்டல் மாற்றங்கள் குறைவாக இருக்கலாம், வெளிப்புற அப்டேட்கள் புதிய பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

உள் அலங்கார அப்டேட்கள் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் மற்றும் தற்போதைய 7 இன்ச் யூனிட்டை விட பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை உள்ளடக்கியிருக்கலாம். டயாகோ, தற்போதைய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜின்களைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
டாடா டிகோர், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அப்டேட்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்புற வடிவமைப்பு, மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட லைட்டிங் கூறுகள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டு புதிய டயாகோவை பிரதிபலிக்கும். உள்ளே, பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை ஆப்டேட்களாக இருக்கலாம்.

டிகோ, எந்தவொரு இன்ஜின் மாற்றமும் இல்லாமல், தற்போதைய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜின்களை தொடர்ந்து பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஃபெர்பார்மென்ஸில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது.
டாடாவின் மலிவு விலை கார் ரேஞ்சில்ல் இந்த மூலோபாய அப்டேட்கள், மலிவான விலையை பராமரிப்பதுடன், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களை அப்டேட் செய்வதன் மூலம், டாடா மோட்டார்ஸ், பாதுகாப்பு மற்றும் புதுமைக்கான அதன் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் போட்டித்தன்மை வாய்ந்த என்ட்ரி லெவல் கார் மார்கெட்டில்ல் அதன் நிலையை வலுப்படுத்த முயல்கிறது.


Click it and Unblock the Notifications









