டாடா நிறுவனத்தை கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்த இந்திய மக்கள்! இப்படி நடக்கும்னு கனவுல கூட நெனச்சு பாக்கல!

2025ம் ஆண்டின் ஜூன் மாதம் முடிவடைந்து, ஜூலை மாதத்தில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த தருணத்தில், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டுள்ளன. இந்த வரிசையில், இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளி வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டில், 37,083 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் உள்நாட்டில், 43,524 டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 14.80 சதவீத வீழ்ச்சி ஆகும்.

2025 Tata Altroz Side Design

இந்த உள்நாட்டு விற்பனையில், எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை எண்ணிக்கையும் அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் தனியாக எடுத்து கொண்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், 5,228 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 4,657 எலெக்ட்ரிக் கார்களை மட்டும்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலமாக எலெக்ட்ரிக் கார் விற்பனையில் 12.26 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

2025 Tata Altroz

எலெக்ட்ரிக் கார் விற்பனையை போலவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து 154 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 100 ஆக மட்டுமே இருந்தது.

இந்த வகையில் பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 54 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒரு விஷயமாகவே இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் (இந்தியாவின் உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி என இரண்டும்), டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 37,237 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 43,624 ஆக இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த விற்பனையில் 14.64 சதவீத வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், ஏராளமான கார் நிறுவனங்கள் விற்பனையில் வீழ்ச்சியையதான் சந்தித்துள்ளன. அப்படி சரிவை சந்தித்த கார் நிறுவனங்களில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். எனினும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில், இந்த சரிவில் இருந்து மீண்டு, வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று நாம் நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 1, 2025, 18:23 [IST]
English summary
Tata motors sales report june 2025 15 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+