மழைக்கு கூட டாடா ஷோரூம்களில் ஒதுங்க தயங்கும் மக்கள்! நல்ல கம்பெனியை இப்படி மொத்தமா கை கழுவிட்டாங்களே!
2025ம் ஆண்டின் மே மாதம் முடிவடைந்து, ஜூன் மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) வரிசையாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் (Tata Motors) வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 46,697 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 41,557 ஆக சரிவை சந்தித்துள்ளது.

மறுபக்கம் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 378 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் சரிவையே பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 47,075 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் 42,040 ஆக சரிவடைந்துள்ளது.

இது 11 சதவீத வீழ்ச்சி என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கவலையை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தொடர்ந்து 2வது மாதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வீழ்த்தியுள்ளது என்பதுதான்.
அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 52,431 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனமோ நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 41,557 கார்களை மட்டும்தான் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் விற்பனை செய்திருக்கிறது.
இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து 2வது மாதமாக வீழ்த்தியுள்ளது. முன்னதாக நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் கூட மஹிந்திரா நிறுவனத்திடம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் வீழ்ந்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45,199 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் மஹிந்திரா நிறுவனமே இந்த காலகட்டத்தில் 52,330 கார்களை விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் மஹிந்திரா நிறுவனத்தின் கை ஓங்கி கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமீப காலமாக டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இடையே போட்டி அனல் பறந்து கொண்டுள்ளது. இதில், மஹிந்திரா நிறுவனத்தின் கை ஓங்குவதை விற்பனை எண்ணிக்கைககள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் சுதாரிக்க வேண்டிய நேரம் இது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Punch Facelift) காரை இந்திய சந்தையில் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு உள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதன் வருகை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








