மஹிந்திரா இ-கார்களவிட கம்மி விலையில் டாடா இ-கார் விற்பனைக்கு வர போகுதா! செம்ம ஷாக் ட்ரீட்மென்ட் ரெடியாகுது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் பிஇ6 கார் மாடல் ரூ. 18.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், எக்ஸ்இவி 9இ ரூ. 21.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு டஃப் கொடுக்கும் விலையில் தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா நிறுவனம் அவின்யா இவி (Avinya EV) எனும் புதுமுக மின்சார காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது.

இதன் அறிமுகம் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார்களுக்கே மஹிந்திராவின் மின்சார கார்களுக்கு டஃப் கொடுக்கும் விலையை டாடா நிர்ணயம் செய்ய இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையே அவின்யா இவி-க்கு டாடா நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விலை அவின்யா இவிக்கு நிர்ணயம் செய்யப்படும் எனில் மஹிந்திராவிற்கு கட்டாயம் அது ஷாக்களிக்கக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கலாம். டாடா மோட்டார்ஸ் இந்த காரை மிகவும் தனித்துவமான தோற்றம் கொண்டதாக தயார் செய்திருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஹாலிவுட் திரைப்படங்களில் வரக் கூடிய கார் மாடல்களைப் போல அதன் ஸ்டைல் உள்ளது.

இத்தகைய காரையே மிகவும் சாவாலான விலையில் சந்தையைக் கைப்பற்றும் நோக்கில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜென்3 ஆர்கிடெக்சரை பயன்படுத்தியே உருவாக்கியிருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது.
இந்த காரை முதன் முதலில் டாடா மோட்டார்ஸ் 2022 ஆம் ஆண்டிலேயே கான்செப்ட்டாக அறிமுகப்படுத்தியது. இதேபோல், இந்த ஆண்டில் நடைபெற்ற பாரத் குளோபல் மொபிலிட்டி எக்ஸ்போவிலும் அவின்யா எக்ஸ் எனும் கான்செப்ட் மாடலை நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதில் அவின்யா இவியே முதலில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அது சற்றே குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கும் சர்வதேச சந்தைக்கு ஏற்ற வடிவமைப்பின் காரணமாக நல்ல வரவேற்பை அது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆங்கில எழுத்து 'டி'-யை பிரதிபலிக்கக் கூடிய எல்இடி லைட்டுகள், டிரைவர் மற்றும் பயணிக்கான திரை, சவுண்ட் பார் ரக ஸ்பீக்கர்கள் என பல அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதேபோல் பின்புறத்தைக் காண்பதற்கு கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்களும், பார்க்கிங் செய்வதற்கு என தனி கேமிரவும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், டாடா அவின்யா விற்பனைக்கு வரும் எனில் விலையில் மட்டுமல்ல சிறப்பம்சங்கள் விஷயத்திலும் மிகப் பெரிய சவாலை அதன் போட்டியாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த பிரிவை தற்போது டாடா மோட்டார்ஸே ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அவின்யா-வை கம்மி விலையில் டாடா விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்தையை எப்போதும் தன் வசம் வைத்திருக்கும் நோக்கில் அது இவ்வாறு செய்யலாம் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








