குடும்பத்துல எல்லாரும் ஒரே கார்ல போகலாம்! விலையும் ரொம்ப கம்மியா தான் வரும்!
2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில், தயாரிப்புக்கு தயாரான சியரா வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் எலெக்ட்ரிக் வாகனமாக (EV) அறிமுகப்படுத்தப்படும், அதன் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் (ICE) எடிசன் பின்னர் வரும். சியராவின் வெளிப்புற வடிவமைப்பில் LED லைட் பார்களை கொண்ட செங்குத்தான அமைப்பில் முன்புறம் உள்ளது. செங்குத்தாக அடுக்கப்பட்ட ஹெட்லைட்கள் உள்ளன.
புதிய சியராவின் பக்கவாட்டு பகுதியில், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் பாடி நிறத்தில் B-பில்லர்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது கருப்பு ரூஃப் ரெயில்கள் மற்றும் முன் கதவுகளில் 'சியரா' என்ற எழுத்துக்களை கொண்டுள்ளது. 2025 டாடா டியாகோ EV இல் முன்பு பார்த்த ஒரு புதிய சில் லைம் பெயிண்ட் ஆப்ஷன் இப்போது இந்த மாடலுக்கும் கிடைக்கிறது.

டாடா சியரா உட்பகுதியில் ஒரு தனித்துவமான மூன்று-ஸ்கிரீன் டேஷ்போர்ட் அமைப்பை கொண்டுள்ளது. இது எந்த டாடா வாகனங்களில் முதன்மையானது. கூடுதல் அம்சங்களில் சஃபாரி மாடலில் இருந்து பெறப்பட்ட நான்கு- ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ADAS தொகுப்பு, 360-டிகிரி கேமரா அமைப்பு, வென்டிலேட்டட் சீட்டுகள், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டச்-அடிப்படையிலான ஏசி கண்ட்ரோல்கள் ஆகியவை உள்ளன.
2025 சியராவின் பின்புறத்தில், இணைக்கப்பட்ட LED லைட் பார் மற்றும் ஒரு பெரிய ஒருங்கிணைந்த ஸ்பாயிலரைக் கொண்டுள்ளது. பின்பக்க பம்பரில் ஒரு போலியான ஸ்கிட் பிளேட் மற்றும் ஒரு முக்கியமான கருப்பு நிற இன்செர்ட்கள் உள்ளது. சிக்னேச்சர் டாடா லோகோ மற்றும் 'சியரா' எழுத்துக்கள் பின்புறத்திலும் உள்ளன.

சியராவின் ICE எடிசன் டாடா உறுதியான 2.0 லிட்டர் கிரைடெக் டீசல் இன்ஜின் பொருத்தப்படும். கூடுதலாக, இது ஒரு புதிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் ஹைபிரிட் TGDi டர்போ-பெட்ரோல் இன்ஜினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியர் ஆப்ஷன்களில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர் பாக்ஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மாடல் வடிவமைப்பு மற்றும் தொழிற்நுட்பத்தில் புதுமையின் மீதான டாடாவின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. சியராவின் EV மற்றும் ICE எடிசன்களை வழங்குவதன் மூலம், ஸ்டபிலிட்டி மீதான அதன் கவனத்தை பராமரிக்கும் அதேசமயம் டாடா பல்வேறு நுகர்வோர் ஆப்ஷன்களுக்கு ஏற்ப செயல்பட விரும்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாக தெரகிறது.
டாடா நிறுவனம் தான் இந்தியவாில் எலெக்ட்ரிக் வாகனங்களை மிக விரைவாக ஏற்றுக்கொண்டு தற்போது அதிக அளவிலான இவிகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் டாடா சியரா காரின் பெயரை தொடந்து தனது புதிய காருக்கு வைத்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே இந்த கார் தற்போது விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சியரா பெயருக்காகவே மக்கள் மத்தியில் விரைவில் பரபலமாகிவிட்டது. இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் தான் முதலில் வருகிறது. இந்த கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதன் விலையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. விலை மிக குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications







