டாடா பார்த்து பார்த்து உருவாக்கிய காரை வாங்க நிறைய பேர் வர மாட்றாங்க! இந்த கம்பெனிக்கு என்ன தான் ஆச்சு?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒன்று. கமர்ஷியல் வாகனங்களையும் விற்பனை செய்கிறது என்றாலும், கார்கள் விற்பனையில் கடந்த 20 வருடங்களில் டாடா மோட்டார்ஸ் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. மாதத்திற்கு சுமார் 50 ஆயிரம் கார்களை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கான பிரம்மாண்டமான கார் நிறுவனம். சிஎன்ஜி (CNG) கார்களிலும், எலக்ட்ரிக் கார்களிலும் (Electric Cars) கூடுதல் கவனம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 51 ஆயிரத்து 616 கார்களை விற்பனை செய்துள்ளது.

இது இந்தியாவில் கடந்த மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்கள் ஆகும். வெளிநாடுகளுக்கும் டாடா கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். சில ஆயிரங்கள் கூட வராது. கார் விற்பனையை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸின் முக்கியமான சந்தை இந்தியா மட்டுமே ஆகும்.

tata motors sold cars

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 51,616 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் கொஞ்சம் அதிகம். ஏனெனில், ஒரு மாத டாடா கார்கள் விற்பனை எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு முன்னும் பின்னும் வருவதுதான் வழக்கம். சில மாதங்களில் 48 ஆயிரம் கார்களை மட்டுமே டாடா நிறுவனம் விற்பனை செய்தது உண்டு.

கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் டாடா மோட்டார்ஸ் 50 ஆயிரத்து 105 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் டாடா கார்கள் விற்பனை எண்ணிக்கை 1,511 அதிகமாகும். 3% டாடா கார்கள் கடந்த மார்ச்சில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

tata motors sold cars

கடந்த மார்ச் மாதத்திலும் வழக்கம்போல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக பஞ்ச் (Punch) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 1 வருடமாகவே பஞ்ச் காரின் விற்பனை எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது. கடந்த 2024 மார்ச் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்தது.

ஆனால், இந்த முறை ஒட்டுமொத்த கார்கள் வரிசையில் 3வது இடத்துக்கு பஞ்ச் சறுக்கியுள்ளது. இத்தனைக்கும், கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்சில் 167 பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 மார்ச்சில் 17,547 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த 2025 மார்ச்சில் 17,714 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் பார்த்தால், டாடா பஞ்ச் காரின் விற்பனை 1% அதிகரித்துள்ளது. பஞ்ச் காருக்கு அடுத்து 2வது இடத்தில் டாடா நெக்ஸான் (Nexon) உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 16,366 ஆகும். 2024 மார்சில் 14,058 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

2024 மார்ச் உடன் ஒப்பிடுகையில் நெக்ஸான் கார் விற்பனை இந்த மார்ச்சில் 16% அதிகரித்துள்ளது. பஞ்ச், நெக்ஸானுக்கு அடுத்து 3வது இடத்தில் டாடா டியாகோ (Tiago) கார் 7 ஆயிரத்து 846 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. நெக்ஸானில் பாதி எண்ணிக்கையிலான டியாகோ கார்கள் கூட கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்படவில்லை.

இதில் இருந்து, பஞ்ச் மற்றும் நெக்ஸான் கார்கள் டாடா மோட்டார்ஸுக்கு எந்த அளவிற்கு முக்கியமானவை ஆக இருக்கின்றன என்பதை அறியலாம். ஆனால் உண்மையில் டியாகோ கார்கள் விற்பனை ஆனது 2024 மார்ச்சை காட்டிலும் 25% அதிகரித்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு மார்ச்சில் 6,381 டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டாடா மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான கர்வ் (Curvv) இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 3,785 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் அந்த ஆண்டின் மார்ச் மாதத்தின்போது விற்பனையில் இல்லை. பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, கர்வ் இவி எலக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா மோட்டார்ஸின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான அல்ட்ராஸ் (Altroz) இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் உள்ளது. 2024 மார்ச் மாதத்தில் 5,985 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2025 மார்ச்சில் வெறும் 1,658 அல்ட்ராஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் செடான் கார்களுள் ஒன்றாக டாடா டிகோர் (TIgor) இந்த வரிசையில் 1,467 யூனிட்கள் விற்பனை உடன் 6வது இடத்தை தனதாக்கி உள்ளது. அதுவே கடந்த 2024 மார்ச் மாதத்தில் 2,017 டிகோர் செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், டிகோர் கார்களின் விற்பனை ஆனது 27% குறைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் விலைமிக்க காரான சஃபாரி (Safari) இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தில் உள்ளது. சஃபாரியின் விற்பனையும் 2024 மார்ச்சில் 2,063 ஆக பதிவாகி இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் 1,415 சஃபாரி கார்களை மட்டுமே டாடா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், சஃபாரி கார்கள் விற்பனை 31% குறைந்துள்ளது.

டாடா சஃபாரியின் 5-சீட்டர் வெர்சனான டாடா ஹெரியர் (Harrier) கடைசி 8வது இடத்தில் உள்ளது. அதாவது, விற்பனையில் உள்ள டாடா கார்களிலேயே கடந்த மார்ச்சில் குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார், ஹெரியர் ஆகும். ஹெரியரின் விற்பனையும் 2024 மார்ச்சில் 2 ஆயிரத்திற்கும் அதிகமாக 2,054 ஆக பதிவாகி இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு மார்ச்சில் 1,265 ஹெரியர் கார்களை மட்டுமே டாடா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சஃபாரியை விட ஹெரியர் விலை குறைவானது என்றாலும், ஹெரியரின் விற்பனை சஃபாரியை விட எப்போதும் குறைவாகவே உள்ளது. டாடா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்த கர்வ் காரின் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதற்கிடையில், நெக்ஸான் கார்களின் விற்பனை முன்னேற்றம் கண்டிருப்பது டாடாவை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 11, 2025, 10:26 [IST]
English summary
Tata motors sold 51616 cars in india in march 2025
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+