டாடா சொந்த செலவில் சூன்யம் வச்சுக்க ரெடி ஆகிட்டு இருக்கு.. இந்தியர்கள் கொஞ்சமும் விரும்பாததை செய்ய போகுது!

இந்தியர்கள் கொஞ்சமும் விரும்பாத, குறிப்பாக, மிகவும் வெறுக்கக் கூடிய காரியம் ஒன்றை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விரைவில் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு ஒன்றுமில்ல, அந்நிறுவனம் அதன் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. சமீபத்தில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கார் காதலர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

குறிப்பாக, மற்ற நிறுவனங்களும் மாருதியைத் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்துவிடுமோ என்கிற அச்சத்தையும் பலரின் மனதில் தோன்றச் செய்தது. இதுவே தற்போது நடக்கத் தொடங்கிவிட்டது. மாருதி சுஸுகியைத் தொடர்ந்து இன்னும் சில நிறுவனங்கள் விலை உயர்வைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

Tata to raise car prices in april 2025

அந்தவகையில், சமீபத்தில் கியா (Kia) அதன் புதிய வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையிலேயே இவர்களுடன் டாடா மோட்டார்ஸும் தற்போது இணைந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸும் மற்ற நிறுவனங்களைப் போலவே வாகன கட்டுமானச் செலவையே இந்த விலை உயர்விற்கு காரணம் என தெரிவித்து இருக்கின்றது.

நிறுவனம் 3 சதவீதம் வரை அதன் தயாரிப்புகளின் விலையில் உயர்வைச் செய்ய இருக்கின்றது. இந்த விலை உயர்வு வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த நாளிலேயே மாருதி சுஸுகி, கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வைச் செய்ய திட்டமிட்டு உள்ளன.

Tata safari and harrier

டாடா மோட்டார்ஸ் கார்களின் விலையை மட்டுமல்ல கமர்சியல் வாகன பிரிவில் வாகனங்களின் விலையையும் உயர்த்த இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில்தான் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி இருந்தது. தற்போது மீண்டும் விலை உயர்வைச் செய்வதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல்களில் சில எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tata punch camo special edition

இவற்றின் விலையையே டாடா மோட்டார்ஸ் விரைவில் உயர்த்த இருக்கின்றது. எவ்வளவு ரூபாய் உயர இருக்கின்றது என்பது துள்ளியமாக தெரியவில்லை. வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னரே எவ்வளவு ரூபாய் இந்த கார் மாடல்களின் விலையில் உயர்த்தப்படும் என்பது தெரிய வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலை அதிகரிப்பால் டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்கிற கேள்வி உங்கள் எல்லார் மனதிலும் தோன்றலாம். ஆனால், இந்த விலை உயர்வால் எந்தவொரு சிறிய பாதிப்பும் அதன் விற்பனையில் ஏற்படாது என்பதே எங்களின் கருத்து.

ஏனெனில், நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பல வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தங்களின் புதிய கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்களில் ஒருவராக டாடா மோட்டார்ஸ் இருக்கப்போவதால் எந்த சிக்கலும் அதற்கு ஏற்படாது என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2025, 22:11 [IST]
English summary
Tata motors to implement car price increase of up to 3 percentage from april 2025
மேலும்... #tata motors #car price hike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X