டாடா நானோ இவி கார் விற்பனைக்கு வருதா? வைரல் புகைப்படத்திற்கு பின்னால் உள்ள உண்மை என்ன?

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக மாறியுள்ள நிலையில், தற்போது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து தற்போது விற்பனையிலிருந்து நிறுத்திய டாடா நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரப்போவதாக சமூக வலைதளங்களில் போலியான புகைப்படங்கள் வெளியாகி பைரலாக பரவி வருகிறது.0 இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீப நாட்களாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் அதிக மோகம் கொண்டு உள்ளார்கள். பெட்ரோல் செலவு மிச்சம் என்பதால் மக்கள் பலர் அதிக விலை இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதில் டாடா நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களை டாடா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.

tata nano ev

இந்நிலையில் டாடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நானோ என்ற தனது சிறிய ரக காரின் விற்பனையை நிறுத்தியது. தற்போது இந்த கார் விற்பனையில் இல்லை. ஆனால் இந்த கார் அறிமுகமாகும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது ரூபாய் ஒரு லட்சத்திற்கு கார் என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றது. பலர் இந்த காரை வாங்கினார்கள்.

ஆனால் இந்த கார் என்னதான் சிறப்பான வடிவமைப்பாக இருந்தாலும் மக்கள் மத்தியில் குறைந்த விலை கார் என்ற பெயரை பெற்று விட்டதால் பலர் இந்த காரை வைத்திருப்பதை விரும்பவில்லை. இதனால் இந்த காரின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார் விற்பனையானது. இந்த காரை விற்பனையில் இருந்து தற்போது டாடா நிறுவனம் நிறுத்தி உள்ளது.

என்னதான் இந்த கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டாலும், தொடர்ந்து இந்த காருக்கு மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து பலர் இந்த காரை செகண்ட் மார்க்கெட்டில் எப்படியாவது வாங்க வேண்டும் என பலர் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தற்போது வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

புகைப்படங்களை பகிர்ந்து பலர் டாடா நிறுவனம் நானோ காரை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் அதன் வடிவமைப்பு இப்படித்தான் இருக்கும் எனவும் பலர் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த புகைப்படங்கள் எதுவும் உண்மை அல்ல. இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது பிரபலமாக உள்ள செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தான். உண்மையாக இப்படியான எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் டாடா நிறுவனம் வெளியிடவில்லை.

செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அவரவர் கற்பனைக்கு ஏற்ப இந்த காரை வடிவமைத்து இது உண்மையான கார் போன்ற ஒரு காட்சியை உருவாக்கி அதை புகைப்படமாக சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி விட்டுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தான் தற்போது உண்மையிலேயே டாடா நிறுவனம் நானோ காரை வெளியிட முடிவு செய்து தயாரித்து உள்ளதாக பலர் நம்பி பகிர்ந்து வருகிறார்கள்.

டிரைவ்ஸ்பர்க் கருத்து: டாடா நிறுவனம் இதுவரை நானோ காரை மீண்டும் தயாரிப்புக்கு கொண்டு வருவது குறித்து அல்லது அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்குவது குறித்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தான். இதனால் மக்கள் இதை நம்பாமல் உஷாராக இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 18:38 [IST]
English summary
Tata nano ev ai generated images viral social media know truth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+