5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காரை அப்டேட் செய்த டாடா! ஊரே இந்த காரை வாங்க குவிக்கப்போகுது!
டாடா நெக்ஸான் கார் 2025ம் ஆண்டிற்கான அப்டேட்டை பெற்றுள்ளது, இதில் இரண்டு புதிய கலர் ஆப்ஷன்களான: ராயல் ப்ளூ மற்றும் கிராஸ்லேண்ட் பெய்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அதன் வெளியீட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியர்லெஸ் பர்பிள் ஷேடு நிறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நெக்ஸானின் விலை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது, முழு விலைப்பட்டியல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
நெக்ஸான் வரிசையில் மூன்று புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன: பியூர் பிளஸ், கிரியேட்டிவ் மற்றும் கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ். இந்த கூடுதல் வேரியன்ட்கள் இருந்தபோதிலும், வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு மாறாமல் இருக்கிறது. வாகனம் தொடர்ந்து டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது

டாடா நெக்ஸானின் புதிய வேரியன்ட்களின் விலை பின்வருமாறு: பியூர் பிளஸ் ரூ. 9.69 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, கிரியேட்டிவ் ரூ. 10.99 லட்சத்தில் தொடங்குகிறது மற்றும் கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ் ரூ. 12.29 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. இந்த விலைகள் அறிமுக விலைகள் தான் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை ஒவ்வொரு நகரத்திற்கும மாறுபடும்.
அம்சங்கள் குறித்து பார்க்கும் போது, நெக்ஸான் காரில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பயன்பாட்டிற்காக இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்களை பொருத்தப்பட்டுள்ளது. இதில் பின்புறய ஆட்டோ ஏசி வென்ட்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, வயர்லெஸ் போன் சார்ஜர், காற்றோட்டமான முன்பக்க சீட்டுகள் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

டாடா நெக்ஸான் உலகளாவிய என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி இரண்டிலிருந்தும் 5-ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் தரநிலையாக 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா சிஸ்டம், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் குழந்தைகள் சீட் ஆங்கர்கள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) ஆகியவை அடங்கும்.
இன்ஜின் ஆப்ஷன்கள் முந்தைய மாடல்களில் இருந்தது போலவே தொடர்கின்றன. இதன் ஆப்ஷன்களில் 120 PS பவர் உடன் 170 Nm டார்க் வெளியிடும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது மேனுவல் (எம்டி), ஆட்டோமேட்டட் மேனுவல் (ஏஎம்டி), டூயல்- கிளட்ச் ஆட்டோமேட்டிக் (டிசிடி) அல்லது டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் (ஏடி) உள்ளிட்ட பல கியர் வகைகளில் கிடைக்கிறது.

| இன்ஜின் | பவர் அவுட்புட் | டார்க் | கியர் ஆப்ஷன்கள் |
|---|---|---|---|
| 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் | 120 PS | 170 Nm | 5-ஸ்பீடு எம்டி, 6-ஸ்பீடு எம்டி/ஏஎம்டி/டிசிடி |
| 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (சிஎன்ஜி மோட்) | 100 PS | 170 Nm | 6-ஸ்பீடு எம்டி |
| 1.5-லிட்டர் டீசல் | 118 PS | 260 Nm | 6-ஸ்பீடு எம்டி/ஏஎம்டி |
டாடா நெக்ஸான் இந்தியாவின் மோட்டார் வாகன சந்தையில் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற 4 மீட்டருக்குக் குறைவான எஸ்யூவிக்களுடன் போட்டியிடுகிறது. மக்கள் மத்தியில் நெக்ஸான் காருக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.
இந்த அப்டேட் டியாகோ இவி மற்றும் டிகோர் போன்ற பிற டாடா மாடல்களில் 2025ம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்களைத் தொடர்ந்து வருகிறது. நெக்ஸான் ரேஞ்சில் இந்த அப்டேட்கள் இப்போது நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் கிடைக்கின்றன. இதனால் இந்த காரை புக்கிங் செய்ய நினைப்பவர்கள் அருகில் உள்ள டீலர் ஷிப்களை தொடர்பு கொள்ளலாம்.
டாடா நிறுவனம் தனது நெக்ஸான் காரில் புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தப்படுவதும் கூடுதல் வேரியன்ட்கள் சேர்க்கப்படுவதும் இந்த பிரிவில் அதன் போட்டி சாதகத்தைப் பாதுகாத்து அதே நேரத்தில் பல்வேறு வாடிக்கையாளர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அப்டேட்டிற்கு பிறகு இந்த காரின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெக்ஸான் கார் அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து வருகிறது. அவ்வப்போது விற்பனை டிரெண்டிற்கு ஏற்பவும், வாடிக்கையாளர்கள் விருப்பதிற்கு ஏற்பவும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை அப்டேட் செய்வார்கள். அப்படியான அப்டேட்டாக தான் இந்த அப்டேட் தற்போது செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









