8 லட்சம் யூனிட் விற்பனையை எட்டிய எஸ்யூவி கார்.. மாருதி, மஹிந்திரா தயாரிப்பு கிடையாது.. அப்போ வேற யாருடையது?..

இந்தியாவில் எஸ்யூவி (SUV) கார் மாடல் ஒன்று '8 லட்சம் யூனிட்டுகள் விற்பனை' எனும் மாபெரும் சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அது மாருதி சுஸுகி (Maruti Suzuki) தயாரிப்பு அல்ல என்பதுதான். இதேபோல், மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) இந்த நிறுவனங்களின் தயாரிப்பும் அது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. "அப்போ அது வேறு யாரோடைய தயாரிப்புதாங்க" என கேக்குறீங்களா.. எல்லாம் நம்ம டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஓட தயாரிப்புதான்.

டாடா, இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் நெக்ஸான் (Nexon)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலே இந்திய சந்தையில் 8 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எனும் அசாத்தியமான சாதனையை படைத்திருக்கின்றது. இந்தியாவில் டாடாவின் வேறு எந்த எஸ்யூவி கார் மாடலும் செய்திராத ஓர் சாதனையே இதுவாகும்.

Tata nexon hits 8 lakh sales milestone

ஆமாங்க, 8 லட்சத்தைக் கடந்து விற்பனையில் இருக்கும் இந்தியாவின் முதல் டாடா எஸ்யூவி கார் மாடல் இதுவே ஆகும். இந்தியாவின் சப் 4 மீட்டர் எஸ்யூவி (Sub-4 Meter SUV) கார் பிரிவிலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவலின் வாயிலாக இந்த பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் நெக்ஸான்-ம் ஒன்று என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாகி இருக்கின்றது. இந்தியாவில் டாடா நெக்ஸான் கார் 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிதியாண்டு 2018இல் சுமார் 27,547 யூனிட்டுகள் வரை இந்த கார் மாடல் விற்பனையாகியது.

Tata nexon front profile pic

இதற்கு அடுத்தபடியாக 2019ஆம் ஆண்டில் 55,008 யூனிட்டுகளும், நிதியாண்டு 2020இல் 43,260 யூனிட்டுகளும், அடுத்ததாக 2021இல் 63,756 யூனிட்டுகளும் அது விற்பனையாகின. இதற்கு அடுத்த வந்த இரண்டுகள் தான் நெக்ஸானுக்கான மிக சிறந்த ஆண்டுகள் ஆகும். இதற்கேற்ப 2022 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் யூனிட்டுகளைத் தாண்டி அது விற்பனையாகியது.

1,24,130 யூனிட்டுகள் வரை அந்த ஆண்டு விற்பனையாகியது. இது 94.70 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். இதேபோல், 2023இல் 38.68 சதவீதம் விற்பனை வளர்ச்சியை நெக்ஸான் பெற்றது. 1,72,138 யூனிட்டுகளே அந்த ஆண்டில் விற்பனையாகின. இதற்கு அடுத்த உள்ள இரண்டு ஆண்டுகளும் சற்றே மோசமான ஆண்டுகளாக நெக்ஸானுக்கு அமைந்திருக்கின்றது.

Tata nexon ev front profile pic

2024 இல் 0.12 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை அது சந்தித்தது. அந்த ஆண்டில் 1,71,929 யூனிட்டுகள் வரை மட்டுமே நெக்ஸான் விற்பனையாகியது. இதேபோல், நடப்பு 2025இல் இதுவரை 1,46,723 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி உள்ளன. இவ்வாறு ஏற்றத்தையும், இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்து வந்தாலும் அது ஒட்டுமொத்த சேல்ஸ்-இல் மாபெரும் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது.

அதாவது, மொத்தமாக இதுவரை 8 லட்சத்து 4 ஆயிரத்து 491 யூனிட்டுகளைக் கடந்து அது நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த மாபெரும் எண்ணிக்கையால் சப் 4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவின் மகுடம் சூடா மன்னனாக நெக்ஸான் மாறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Tata nexon dark edition pic

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பலதரப்பட்ட வெர்ஷன்களில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் பெட்ரோல் ஆப்ஷன் ரூ. 8.89 லட்சம் என்கிற விலையிலும், 8.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதேபோல், டீசல் மோட்டார் 9,99,990 ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், நெக்ஸான்.இவி எலெக்ட்ரிக் கார் ரூ. 12.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுபோன்ற பன்முக ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் இந்த கார் மாடல் தற்போது 8 லட்சத்தைக் கடந்து விற்பனையில் இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இந்தியாவின் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலாகவும் இது இருக்கின்றது. பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமல்ல பிரீமியம் அம்சங்களையும் மிக மிக தாராளமாக இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இதன் ஆரம்ப நிலை வேரியண்டிலேயே அதிகம் பிரீமியம் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் ஃப்ளிப் சாவி, எலெக்ட்ரிக்கலாக ஆபரேட் செய்யும் வசதிக் கொண்ட பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், 17.78 செமீ அளவுள்ள ஹர்மேன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல, ஆட்டோ ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியும் நெக்ஸான்-இன் ஆரம்ப நிலை வேரியண்டில் இடம் பெற்றிருக்கும். தொடர்ந்து, பவர் விண்டோ, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஃபாலோ மீ ஹோம் லைட், வீல் கவர்கள், இ-ஷிஃப்டர் மற்றும் பேடில் ஷிஃப்டர் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் டாடா மோட்டார்ஸ் நெக்ஸானின் அதன் ஆரம்ப நிலை வேரியண்டிலேயே வழங்கி இருக்கின்றது.

இதுதான் பலரும் இந்த காரை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பெரும் பணக்காரர்கள் சிலரும் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில் பெரும் கோடீஸ்வரர் மற்றும் இந்தி திரைப்பட நடிகை மாதுரி திக்ஸித்-இன் கணவர்கூட நெக்ஸான் கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை பயன்படுத்தி வருகின்றார்.

இதுவே அவருக்கு பிடித்தமான கார் மாடல் என்றும் அவர் வெளியுலகில் கூறியிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. அவர் பயன்படுத்தி வருவது டாடா நெக்ஸான்.இவி-யின் டார்க் எடிசன் ஆகும். வழக்கமான நெக்ஸான்.இவி-யைக் காட்டிலும் சற்றே அதிக கவர்ச்சியான மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் பதிப்பே நெக்ஸான்.இவி டார்க் எடிசன் ஆகும்.

இந்தியாவில் டாடா நெக்ஸான் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக், ஆகிய வெர்ஷன்களில் மட்டுமல்ல சிறப்பு பதிப்பாகவும் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவே அதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நெக்ஸான்-இன் அனைத்து வெர்ஷன்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நெக்ஸான்.இவி-க்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்ட் கணிசமான அளவில் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இருப்பினும், புதிய போட்டியாளர்களால் அது சந்தையில் லேசான தடுமாற்றத்தைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

FAQs
டாடா நெக்ஸான் கார் மாடலின் மைலேஜ் விபரம்.

டாடா நெக்ஸான் பன்முக ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், இதன் பெட்ரோல் அவதாரம் ஒரு லிட்டருக்கு 17 கிமீ முதல் 18 வரையிலும், சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோவிற்கு 18 கிமீ முதல் 20 கிமீ வரையிலும் மைலேஜ் தருகின்றன. அதேவேளையில், டீசல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 22.3 கிமீ வரையில் மைலேஜ் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நெக்ஸான்.இவி கார் மாடலின் ரேஞ்ச் விபரம்.

இந்தியாவின் டாப் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் டாடா நெக்ஸான.இவியும் ஒன்றாகும். இது இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 30 kWh மற்றும் 45 kWh

ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 210 கிமீ முதல் 230 கிமீ தூரம் வரை ரேஞ்ச் தரும். இரண்டாவது ஒன்றில் 350 கிமீ முதல் 375 கிமீ வரை ரேஞ்ச் பெற்றுக் கொள்ள முடியும்.

டாடா நெக்ஸான் பாதுகாப்பு திறன் எப்படி?

முதன்முதலில் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த கார் மாடல் அதிக பாதுகாப்புமிக்கது என்பது தெரிய வந்தது. அது ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று ஒட்டுமொத்த நாட்டையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. நிஜ வாழ்க்கையிலும் மிகப் பெரிய விபத்துகளின்போது இது உயிர்களை பாதுகாத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2025, 13:01 [IST]
English summary
Tata nexon become the first tata suv to surpass 8 lakh sales in india
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X